அவர்களின் தலைவரான பிருகு முனிவர் ''முக்குணங்களுள்ளும் சத்துவ குணத்தை எல்லா நிலையிலும் போற்றி வாழ்பவனே பரத்துவ நிலையான் அவனை இன்னான் என அறிந்து கூறுவேன்'' எனக் கூறி நேரே கைலை மலைக்குச் சென்றார். கோயில் வாயிலைச் சேர்ந்ததும் காவலராகிய நந்தியால் தடுக்கப் பெற்று, வாயிலிலேயே காத்து நின்றார். ஏழு நாள் காத்திருந்தும் சிவனார் தரிசனம் கிடைத்தபாடில்லை. சத்தியலோகம் சென்றார். பிரமனை வணங்கினார். தந்தையைத் தனயன் வணங்குதல் இயல்புதானே எனப் பிரமன் எதிர் வணக்கம் செய்யாது இருந்தான். வெகுண்ட பிருகு ''செருக்கால் நிலை மறந்த உனக்கு ஆலயப் பிரதிஷ்டை இன்று முதல் இல்லாமற் போக'' எனச் சபித்து நேரே வைகுந்தம் சென்றார். திருமாலோ அனந்தன் மீது பள்ளி கொள்ள திருமகள் உடல் வருடிக் கொண்டு அறிதுயிலில் இருந்தான். எனவே, பிருகு முனிவரைப் பார்க்க வாயிற் காவலர்கள் அஞ்சினர், என்றாலும் அவர் உயர்வு கருதி தடை செய்யவில்லை. நேரே உள் நுழைந்த பிருகு முனிவர் பரமனை மார்பில் உதைத்தார். துயில் எழுந்த திருமால், ''அய்யா! தங்கள் அடி நொந்ததோ? தம் திருவடி தீண்டப் பெற்றதால் எம் மார்பு திருநின்ற நிலை பெற்றது. நும் வரவு அறியாது துயின்ற என்னை மன்னித்தருள்க!'' என்று பணிவோடு கூறினார். முனிவன் வெகுளி நீங்கித் தன் நிலையுற்றுப் பரமனின் தாளிணைகளில் வீழ்ந்து மன்னித்து அருளுமாறு தன் செய்கையின் காரணத்தையும் கூறி வேண்டினான். |
சூரியகுல மன்னர்களுள் ஒருவன் மனுச் சக்கரவர்த்தி. மனுச் சக்கரவர்த்தியின் மகன் இட்சுவாகு. இவனுக்கு மக்கள் நூறு பேர். அவர்களில் கடைசியில் பிறந்தவனும் மூடனும் மூர்க்கனும், கொடியவனுமானவன் பெயர் தண்டன் என்பது. இவன் விந்திய மலைக்கும், கைலை மலைக்கும் இடையில் உள்ள நிலப் பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியின் தலைநகர் மதுமந்தம் என்பது. இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் இவனுடைய புரோகிதன் |