பக்கம் எண் :

764யுத்த காண்டம் 

சுக்கிராச்சாரியாரின் ஆசிரமத்திற்கு இவன் சென்றான். அங்கே
சுக்கிராச்சாரியாரின்   மகள் அரளை என்பாளைக்  கண்டு மயங்கி
வலியச்   சென்று அவளைக்   கற்பழித்தான்.   இதனை  அறிந்த
சுக்கிராச்சாரியார்   சினந்து, இவ்வாறு   செய்த அவன்   மட்டும்
அன்றி அவனைச் சேர்ந்தார் அனைவரும் ஏழு நாட்களில அழிந்து
போகுமாறும்  அவனது நாடு  மன்மலையால் மூடப் பெற்று ஓரறிவு
உயிர் கூட இல்லாமல் போகுமாறும் சபித்தார். அங்ஙனமே ஆயிற்று.
காலப்  போக்கில் அது   அடர்ந்த காடாயிற்று.  தண்டனால் நாடு
காடான   காரணத்தால் அக்காடார்ந்த பகுதியைத் தாண்டக வனம்
என அழைக்கலாயினர்.
  

28. திருமால் மழுவாளிக்கு அன்றளித்த ஐயம் 

என்பதில் அடங்கியுள்ள வரலாறு (2574)
 

சிவபெருமான் பிரமனின் சிரங்களில் ஒன்றனைக் கிள்ளி விட்டார்.
கிள்ளப்பட்ட தலை சிவனின் கரத்தில் ஒட்டிக் கொண்டது. இப்பாவம்
தொலைய   கபாலத்தைப்   பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை
எடுக்கவேண்டும் எனவும், அப்பாத்திரம் நிரம்பும்போது அது கையை
விட்டு   அகலும் என்றும்   தேவர்கள்  கூறினர்.   அதன்படி  பல
இடங்களில் சென்று பிச்சை எடுத்தும் நிரம்பாத பாண்டம் திருமாலிடம்
ஐயம் ஏற்றதும் நிரம்பிக் கையை விட்டுவிட்டது என்பது வரலாறு.
 

29. திருமால் ஏனமாய் மண்ணிடந்ததில் 

அடங்கியுள்ள வரலாறு (2575, 9916, மி309)
 

இரணியாக்கன் என்ற அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில்
மறைத்து வைத்துக் கொண்டிருந்தான். திருமால் பன்றி உருவாகிக் கடலுள
நுழைந்து பூமியைத் தன் கொம்பால் குத்தி எடுத்து வந்த கதை.
 

30. காவிரி கொணர்ந்தான் என்பதில் 

அடங்கியுள்ள வரலாறு (2676)
 

முன்னொரு   காலத்தில் சிவன்,  உமை திருமணம் காண தேவர்கள்
முனிவர்கள் எல்லாரும்  கைலையில் கூடினர். அவ்வாறு ஒரே நேரத்தில்
எல்லாரும்   கூடியதனால்   வடதிசை  தாழ்ந்து  தென்திசை உயர்ந்தது.
இதனைச் சமச்சீர் செய்ய அகத்தியரை