பலர். உண்மை உணர்ந்த முனிவர்கள் அகத்தியரை அணுகிக் காத்தருள வேண்டும் என வேண்டினர். அகத்தியரும் வில்வலன் வேண்டு கோளின்படி வாதாபியை உண்டார். ஆனால் வில்வலன் வாதாபியை அழைப்பதற்கு முன்பாகவே அகத்தியர் 'வாதாபி ஜீரணம் அடைவாயாக' என்று ஆணை பிறப்பித்தார். தவ முனிவர் ஆணைப்படி வாதாபி ஜீரணம் ஆனான். தம்பியை இழந்த வில்வலன் வெகுண்டு அகத்தியர் மீது போர்க்கு வரவே அகத்தியர் தம் கண்களில் தீப்பொறிகளைக் கிளப்பி வில்வலனை எரித்து அழித்தார். |
32. அகத்தியர் விண்தோய் விந்தம் அடக்கி |
நின்ற கதை (2287, 2669) |
முன் ஒரு காலத்தில் விந்திய மலையானது மேரு முதலிய மலைகளைக் காட்டிலும் உயரமாக விளங்க வேண்டுமென்று கருதி விண்ணினை நோக்கி உயர்ந்து வளர்ந்த காரணத்தால் கதிரவனும், மதியும், விண்மீன்களும் தத்தம் இயக்கங்களைச் சரியாகச் செய்ய இயலாமல் தடையாயிற்று. இதனால் வருந்திய தேவர்கள் அகத்திய முனிவரை அணுகி அதன் வளர்ச்சியைத் தடை செய்யுமாறு வேண்டினர். அவர் வடதிசையில் இருந்து ஆண்டவன் கட்டளைப்படி தென்திசைக்கு வந்து கொண்டிருந்தார். விந்திய மலையை அணுகியவுடன் விந்திய மலை அகத்தியர் அடி பணிந்து குறுகி நின்றது. அப்போது அகத்தியர், ''விந்தியமே! நான் தென் திசைக்கேகி மீண்டும் வடதிசை திரும்பும் வரை என் முன்னர் குறுகி நின்றது போன்று குறுகிக் கிடப்பாயாக'' எனப் பணித்துச் சென்றார். அம்மலை மேல் ஏறி தென்திசை புறப்பட்டார் என்பது வரலாறு. |
33. 'அநங்கன் நல்லுருப் பெற்றனன்'' என்பதில் |
அடங்கியுள்ள வரலாறு (2744) |
சூரபதுமன் என்ற அரக்கனும் அவனைச் சேர்ந்தாரும் அமரர்க்கு ஆரா அல்லல்களை அளித்து வந்தனர். சிவனிடம் வரம் பெற்ற வல்லாளர்கள் அவர்கள். எனவே, அவர்களை அமரர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது எல்லாத் தேவர்களும் சிவனிடம் சென்று தங்கள் இன்னல்கள் கூறினர். ''அமரர்களே! அஞ்ச வேண்டா என்பால் தோன்றும் மகன் |