பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்769

36. சாலகடங்கர் மரபின் தையல் என்பதில் 

அடங்கியுள்ள வரலாறு (2781)
 

விஸ்ரவஸ்   வழி வந்தவர்களில்   வித்யுத்கேசன் என்பவன்
சாலகடங்கடை   என்ற  அசுரர்   குலப் பெண்ணை மணந்தான்.
அவர்களுக்கு மாலியவான், சுமாலி,    மாலி என்பவர் பிறந்தனர்.
சுமாலியின் மகள் இராவணன் முதலியோரைப்  பெற்றெடுத்தவள்.
இவள்   பெயர் கேகசி. எனவே, சூர்ப்பணகையின் தாய் அரசர்
குல மரபினள்.
 

37. கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் 

என்பதில் அடங்கியுள்ள வரலாறு (3052)
 

விசுவகன்மன் இரண்டு வன்மை வாய்ந்த விற்களைச் செய்து
ஒன்றை சிவனுக்கும் மற்றொன்றைத் திருமாலுக்கும் அளித்தனன்.
இவ்   இரண்டு விற்களில்   வலிமை மிக்கது எது என அறியத்
தேவர்கள் விரும்பினர். பிரமன் அரிக்கும், அரனுக்கும் போரை
மூட்டினான். இருவரும்  அவ்விற்களை வைத்துப் போரிட்டனர்.
சிவனுடைய வில் கொஞ்சம் சிதைவுற்றது. அவ்வாறு கொஞ்சம்
சிதைந்த அந்த   வில்லை ஜனகரின் மூதாதையான தேவராதன்
என்பானிடம் கொடுத்தான். அவன் முதல் ஜனகர் வரை அந்த
வில்லைக் காத்து   வந்தனர். அந்த   வில்லைத்தான் இராமன்
வளைத்துச் சீதையை மணந்தான். திருமாலோ தன் கை வில்லை
இரிசிக முனி   என்பானிடம்   கொடுத்து விட்டார். அந்த வில்
பரம்பரையாக   மாறி மாறி வந்து  பரசுராமனிடம் வந்தது. பரசு
ராமன் இராமனோடு போர் தொடுத்து, ''இற்ற  வில்லை முறித்த
வீரா, என் வில்லை ஒடி பார்ப்போம்'' என அழைக்க இராமன்
அந்த வில்லையும் வளைத்து அம்பினை ஏற்றினான். ''ஏற்றப்பட்ட
அம்புக்கு இலக்கு யாது?'' எனப் பரசுராமரை  இராமன் கேட்க,
பரசுராமன் வணங்கி,   ''என் தவப்பயன்  அனைத்தையும் உன்
அம்பின் இலக்காக்கிக் கொள்''  என வேண்டினான். அவ்வாறு
செய்து    பெற்ற அந்த வில்லினை    வருணனிடம் கொடுத்து
வைத்திருக்குமாறு    இராமன் பணித்தான்.   அவன் அதனைப்
பாதுகாப்பாக     வைத்திருந்து வனம்      புகுந்து அகத்தியர்
ஆசிரமத்தில்   தங்கியிருந்த இராமனிடம் ஒப்படைக்க வந்தான்.
ஆனால்   இராமனோ 'தக்க   சமயம் வரும்வரை உன்னிடமே
பாதுகாப்பாய் இது இருக்கட்டும்' எனக் கூறி அவனிடம்