பெற்ற உயிர்கள் எத்தனையோ அத்தனை காலாட்படை வீரர்கள் (என்று அளவிறந்தன அரக்கரின் நால்வகைப் படைகள்) |
உயிர்கள் அனுபவிப்பதற்கென இறைவனால் எத்தனையோ பல போகங்கள் படைக்கப்பட்டுள்ளனவோ அத்தனை புரவிகளின் கூட்டம் எனவும் மூன்றாவது வரிக்குப் பொருள் கொள்ளலாம். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா எங்கள் இறைவா' எனச் சுப்பிரமணிய பாரதியார் பாடியது இங்கு நினைவுகூரத் தக்கது. |
(13) |
9312. | இன்ன தன்மைய யானை, தேர், இவுளி என்று |
| இவற்றின் |
| பன்னு பல்லணம், பருமம், மற்று உறுப்பொடு பலவும், |
| பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது |
| புனைந்த |
| சின்னம் உள்ளன இல்லன, மெய்ம் முற்றும் |
| தெரிந்தால். |
|
இன்ன தன்மைய - இத்தன்மைகளைக் கொண்ட; யானை தேர் இவுளி என்று இவற்றின் - யானை, தேர், குதிரை ஆகிய இவற்றின்; மெய் முற்றும் தெரிந்தால் - உடல் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால்; பன்னு பல்லணம் பருமம் - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற (குதிரை மீது உள்ள) தவிசும், (யானை மேல் இடும் ஆசனமாகிய) இருக்கையும்; மற்று உறுப்பொடு பலவும் - மற்றும் உள்ள பலவேறு உறுப்புகளும்; பொன்னும் நல் நெடு மணியும் கொண்டு அல்லது - பொன்னும் நல்ல பெரிய மணிகளும் கொண்டல்லது; புனைந்த சின்னம் உள்ளன இல்லன - வேறு செய்த அடையாளக் குறிகள் கொண்டவை இல்லையாம். |
(14) |
9313. | இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக, மேல் |
| எழுந்த |
| துப்பு உதிர்ந்தன தூளியின் படலம் மீத் தூர்ப்ப, |
| தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது; கரி மதம் தழுவ, |
| உப்பு நீங்கியது, ஓங்கு நீர் வீங்கு அலை உவரி. |
|
இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக - அரக்கரின் இந்தப் பெரிய படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு ஆரவாரம் செய்து போகும்போது; ஓங்கு நீர் வீங்கு அலை உவரி- பெருகிவரும் நீர் கொண்டதும் பொங்கும் அலைகள் |