பக்கம் எண் :

 கதைக் குறிப்புகள்773

தோன்றி  ''தமோகுணங்களின்  உருவான  நூறு  வயது  வாழக் கூடிய
மகன்  ஒருவன்  வேண்டுமா,  சிறந்த பக்தியும் அறிவும் மிக்க ஆனால்
பதினாறு  வயது  வரையே  வாழக்கூடிய  மகன்  ஒருவன்  வேண்டுமா
இருவரில் நீங்கள் விரும்பும் ஒரு மகனைப் பெறுவீர்''  என, இவர்களோ
பதினாறு   வயதுடைய  அறிவு  மிக்க  குழந்தையே  போதும்  என்ன,
அவ்வாறே  பெற்றுக்  குழந்தைக்குப் பதினாறு வயது ஆனபோது உளம்
வருந்தினர்.  காரணம்  அறிந்த  மார்க்கண்டேயன் எனப்  பெயருடைய
அக்குழந்தை நேரே சிவன் கோயில் சென்று சிவனை வழிபட்டு நின்றார்.
பதினாறு வயது முடிந்த நிலையில் எமதூதர்கள் வந்து இவரின் உயிரைக்
கவர  முடியாது  சென்றனர்.  எமனே  நேராக  வந்து அழைக்கின்றான்.
ஆனால் அக்குழந்தையோ கோவிலை விட்டு வெளியே  வர மறுக்கவே,
எமன்  தன்  பாசக்கயிற்றை  ஏவினான்.  குழந்தையோ சிவலிங்கத்தைக்
கெட்டியாகப்  பற்றிக்  கொண்டது.  இந்நிலையில்   எமன்   கயிற்றால
இழுக்கவே அது சிவலிங்கத்தைச் சேர்த்து இழுத்தது. வெகுண்ட  சிவன்
காலனைக்  காலால்  உதைத்து  வீழ்த்தி  மார்க்கண்டேயரை  என்றும்
பதினாறு வயதுடையவராய் வாழ வரம் தந்தார் என்பது வரலாறு.
 

43. சுந்தோபக சுந்தப் பெயர்த் தொல்லையினோர் (3986)
 

நிசும்பன்  என்ற  அசுரன்  இரணியகசிபு  குலத்தில் தோன்றியவன்.
அவனுக்கு சுந்தன், உபசுந்தன் என்ற மக்கள் இருந்தனர்.  இவ்விருவரும்
உண்ணல், உறங்கல், உரையாடல், இருத்தல், படுத்தல், எழுதல், நடத்தல்
ஆகிய  எல்லாச்  செயல்களிலும்  ஒன்றாகவே  இயங்கினர்.  ஒருவனை
விட்டு  ஒருவன்  பிரிவதே  இல்லை.  இன்பம், துன்பம்  ஆகியவற்றை
ஒன்று  போலவே  அனுபவித்தனர்.  இவர்கள்   உலகங்களையெல்லாம்
தன்   கீழ்ப்படுத்த  மும்மூர்த்திகளை  எண்ணி  கடுந்தவம்  இருந்தனர்.
அதனால்  அச்சமுற்ற  அரசர்கள் பெண்கள் பலரை  ஏவி அவர்களின்
தவத்தைக்   கலைக்க   முயன்றும்    முடியவில்லை.   மும்மூர்த்திகள்
தோன்றி பல வரங்களைக்   கொடுத்தனர்.  அவைகளில்  ஒன்று   பிற
உயிர்களால் அவர்களுக்கு மரணம் இல்லை என்பது. வரவலிமை பெற்ற
அவர்கள் அரசர்களுக்கு மட்டுமல்லாமல் பிற உயிர்களுக்கும் தொல்லை
தந்தனர்.  எல்லாரையும்   அடிமைப்   படுத்தினர்.   இன்னல்  பெற்ற
தேவர்கள் பிரமனிடம்  சென்று  தம்  குறைகளைக்  கூறினர்.  பிரமன்
உலகின் அழகுடைய பொருள்கள்