பக்கம் எண் :

78யுத்த காண்டம் 

கொண்டதுமான  கடல்;  மேல் எழுந்த துப்பு உதிர்ந்தன 
தூளியின் படலம் மீத் தூர்ப்ப
- மேல் எழுந்து பரவியதும் 
பவளம் தூளாகி  உதிர்ந்தது  போன்றதுமான  தூசிப் படலம்
(கடற்பரப்பின்)  மேற்பரப்பின் மீது வீழ்ந்து தூர்த்தமையால்; 
தப்பு  இல்  கார்  நிறம்  தவிர்ந்தது
- இயல்பான கரிய 
நிறத்தை இழந்தது; கரி மதம் தழுவ- சேனையில் உள்ள 
யானைகளின்  மத  நீர்  கலந்ததால்;  உப்பு நீங்கியது
உவர்ப்புச் சுவை நீங்கியது. 
 

(15)
 

9314.

மலையும், வேலையும், மற்று உள பொருள்களும்,

வானோர்

நிலையும், அப் புறத்து உலகங்கள் யாவையும், நிரம்ப

உலைவுறாவகை உண்டு, பண்டு உமிழ்ந்த பேர்

ஒருமைத்

தலைவன் வாய் ஒத்த - இலங்கையின் வாயில்கள் 

தருவ.

 

தருவ- (மூலப் படையை) வெளியே விடுக்கின்ற; இலங்கையின்
வாயில்கள்
-   இலங்கையின்  வாசல்கள்;  மலையும் வேலையும்
மற்று உள பொருள்களும்
- மலைகளும் கடல்களும் மற்றும் உள்ள
பொருள்களும்; வானோர் நிலையும்- தேவர் உலகமும்; அப்புறத்து 
உலகங்கள்  யாவையும்
-  அப்பால்  உள்ள  எல்லா உலகங்களும்; 
நிரம்ப
-  திருவயிறு  நிறையும்படியாக;  உலைவுறாவகை உண்டு
சிதைவுறாமல்  உண்டு;  பண்டு உமிழ்ந்து- முன்பு  உமிழ்ந்தருளிய; 
பேர்  ஒருமைத்  தலைவன்  வாய்  ஒத்த
- பெரியவனும் தனிப் 
பெருந்   தலைவனுமாகிய  திருமாலினது  திருவாயினைப்  போன்று 
காணப்பட்டன. 
 

(16)
 

9315.

கடம் பொறா மதக் களிறு, தேர், பரி, மிடை, 

காலாள்

படம் பொறாமையின் நனந் தலை அனந்தனும் 

பதைத்தான்;

விடம் பொறாது இரி அமரர்போல் குரங்குஇனம் 

மிதிக்கும்

இடம் பொறாமையின், இரிந்து போய், வடதிசை  

இறுத்த.