பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்79

கடம் பொறா மதக்களிறு- கன்னத்திலிருந்து  தடையின்றிப்
பெருகும்  மதநீர் கொண்ட  ஆண்யானைகள்; தேர், பரி, மிடை,
காலாள்
-   மற்றும்    தேர்கள்,   குதிரைகள்,   நெருங்கியுள்ள
காலாட்படை ஆகியவற்றைச் சுமைமிகுதியை; படம் பொறாமையின்
- ஆயிரந்   தலையிலுள்ள   படங்களால்   தாங்கமுடியாமையால்;
அனந்தனும் பதைத்தான் - ஆதிசேடன் கூடத் துடித்தான்; விடம்
பொறாது
-   பாற்கடல்   கடைந்த   போது  எழுந்த  ஆலகால
நஞ்சினைக்   காணவும்   பொறாமல்; இரி அமரர்போல்- ஓடிய
தேவர்களைப்   போல;  குரங்கு  இனம்   மிதிக்கும்  இடம்
பொறாமையின்
-  குரங்குகள்  தாம்  நின்ற  இடத்தில் நிலைக்க
முடியாமல்;  இரிந்துபோய்-  ஓடிச்சென்று; வடதிசை இறுத்த-
திசையின் வடகோடியில் தங்கின. 
 

(17)
 

9316.

ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த 

ஏழு வேலையும், இடு வலை; அரக்கரே, இன மா; 

வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்; 

தோழம் மா மதில் இலங்கை; மால் வேட்டம் மேல் 

தொடர்ந்தார்.

 

ஆழி மால் வரை வேலி சுற்றிட- சக்கரவாளமாகிய பெரிய
மலையே  வேலியாகச்  சுற்றி  நிற்கும்படி; வகுத்து அமைத்த -
நடுவில் வகுத்து அமைக்கப்பட்ட; ஏழு வேலையும் - ஏழு கடல்கள்
கொண்ட இடம்; இடு வலை- இடப்பட்ட வலை வீசுதலுக்கு உரிய
இடம்;  அரக்கரே  மா  இனம்- அரக்கர்களே  விலங்குகளின்
கூட்டம்; காலனும் விதியும் வெவ்வினையுமே மள்ளர் - யமனும்
பிரமனும்  கொடிய   ஊழ்வினையுமே  (வேட்டையாடும்)  வீரர்கள்;
மாமதில்  இலங்கை தோழம்-  பெரிய  மதில்களைக்  கொண்ட
இலங்கையே  கொட்டில்;  மால்  வேட்டம் மேல் தொடர்ந்தார்
- அந்த   இலங்கையில்    மயக்கம்    ஊட்டும்    (போர்)
வேட்டையைத் தொடர்ந்தார்கள். 
 

(18)
 

9317.

ஆர்த்த ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் 

அதிர்ப்போ?

கார்த் திண் மால் கரி முழக்கமோ? வாசியின் 

கலிப்போ?