பக்கம் எண் :

8யுத்த காண்டம் 

கெட்ட தூதர் கிளத்தினவாறு -  கொடிய தூதர்கள் கூறியவாறு;
ஒரு கட்ட மானிடன் கொல்ல - ஒரு வருந்துந் தன்மையை உடைய
மனிதன் கொல்ல; என்   காதலன்  பட்டு ஒழிந்தனனே' எனும் -
என்   அன்புக்குரிய   மகன்   இறந்து   பட்டனனே!'  என்பான்;
பல்முறை  விட்டு  அழைக்கும்  உழைக்கும் வெதும்புமால்
பலமுறை 'மகனே! மகனே!' என்று குரல் விட்டு அழைப்பான்; (அவன்
வாராமையால்) வருந்துவான்; பின் மனம் வெதும்புவான். 
 

(14)
 

9200.

எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று 

அழும்; அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும், போய் 

விழும்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால், 

உழும் நிலத்தை; உருளும்; புரளுமால். 

 

எழும்; இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று அழும்-
(துன்ப  மிகுதியால்  இராவணன்)  எழுவான்.  பிறகு தரையில்
இருப்பான்;  பெருமூச்சு  விடுவான்,  இரக்கமிக்கு  அழுவான்;
அரற்றும்; அயர்க்கும்; வியர்க்கும்; போய் விழும்- வாய்
திறந்து  அரற்றுவான்;  சோர்வுறுவான்;  வியர்ப்பான்;  சிறிது
நடந்து விழுவான்; விழிக்கும்; முகிழ்க்கும்; தன் மேனியால்
நிலத்தை உழும்; உருளும்; புரளுமால்
- (பேதலித்து ஒன்றும்
தோன்றாமல்)  கண்களை  விழிப்பான்;  பின்பு மூடுவான், தன்
உடம்பினால்  நிலத்தை  உழுவான்;  பின்பு தரையில் உருண்டு
செல்வான், மீண்டும் புரண்டு வருவான்.
 

இரைத்தல் - பெருமூச்சு விடுதல், அயர்த்தல் - சோர்தல்,
முகிழ்த்தல் - கண்களை மூடுதல், கலப்பையால் நிலத்தை உழுவது
போலத் துன்ப மிகுதியால் இராவணன் தன் உடம்பால் நிலத்தை
உழுவான் போல் இயங்கித் துன்புற்றான். 
 

(15)
 

9201.

'அய்யனே!' எனும், ஓர் தலை; 'யான் இனம் 

செய்வெனே அரசு!' என்னும், அங்கு ஓர் தலை; 

'கய்யனேன், உனைக் காட்டிக் கொடுத்த நான், 

உய்வெனே!' என்று உரைக்கும், அங்கு ஓர் தலை. 

 

ஓர்  தலை, 'அய்யனே!'  எனும் -  (இராவணனுடைய  பத்துத்
தலைகளுள்)  ஒருதலை 'அய்யனே!'  என்று அழைக்கும்;  ஆங்கு ஓர்
தலை 'யான் இனம் அரசு செய்வனே!' என்னும்
- மற்றொரு தலை
'யான் இன்னும் அரசு செய்வேனோ!' என்றும் சொல்லும்; 'உனைக்