| போர்த்த பல் இயத்து அரவமோ? - நெருக்கினால் |
| புழுங்கி |
| வேர்த்த அண்டத்தை வெடித்திடப் பொடிந்தது |
| மேன்மேல். |
| |
நெருக்கினால் புழுங்கி - நெருக்கத்தில் வெந்து; வேர்த்த அண்டத்தை வெடித்திட- வேர்த்திடுகின்ற அண்டகோளம் வெடித்திடுமாறு; மேன்மேல் பொடிந்தது- மேலும் மேலும் விளங்கித் தோன்றியது; ஆர்த்த ஓசையோ - வீரர்கள் ஆரவாரித்து எழுப்பிய ஓசையோ? அலங்கு தேர் ஆழியின் அதிர்ப்போ - அசைந்து செல்லும் தேர்ச் சக்கரங்களின் ஓசையா? கார்த்திண் மால் கரி முழக்கமோ - கருநிறமும் திண்மையும் கொண்ட பெரிய ஆண்யானைகள் பிளிறிய ஓசையா? வாசியின் கலிப்போ - குதிரைகளின் ஓசையா? போர்த்த பல் இயத்து அரவமோ?- இத்தனை ஓசைகளையும் உள்ளடக்கிய பல்வகை இசைக் கருவிகளின் ஓசையா? |
(19) |
| 9318. | வழங்கு பல் படை மீனது; மத கரி மகரம் |
| முழங்குகின்றது; முரி திரைப் பரியது; முரசம் |
| தழங்கு பேர் ஒலி கலிப்பது; தறுகண் மா நிருதப் |
| புழுங்கு வெஞ் சினச் சுறவது - நிறைபடைப் புணரி. |
| |
நிறை படைப் புணரி - இடமெலாம் பரவி நிறைந்த சேனையாகிய கடல்; வழங்கு ப ல் படை மீனது- பகைவரை நோக்கிச் செலுத்தப்படுதற்கு உரிய படைக்கலங்களாகிய மீன்களைக் கொண்டது; முழங்குகின்றது மத கரி மகரம்- பிளிறுகின்ற யானைகளாகிய திமிங்கலங்களை உடையது; முரி திரைப் பரியது- கரையில் மோதிச் சிதைகின்ற அலைகளாகிய குதிரைகளைப் பெற்றது; முரசம் தழங்கு பேரொலி கலிப்பது - போர் முரசுகள் ஒலிப்பதால் எழுகின்ற சத்தத்தைக் கொண்டது; தறுகண் மா நிருத - அஞ்சாமை கொண்ட பெரிய அரக்கராகிய; புழுங்கு வெஞ்சினச் சுறவது- மன வேக்காடுடைய கொடிய சினங்கொண்ட சுறாமீன்கள் உடையது. |
சேனை, யானை, குதிரை, முரசொலி, அரக்கர் இவை முறையே கடல், திமிங்கலம், அலை, கடலோசை, சுறாமீன்கள் ஆகியவையாக உருவகம் செய்யப்பட்டன. முற்றுருவகம் மீன் + அது. 'அது' பகுதிப் |