பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்81

பொருளில் விகுதி. அஃதாவது விகுதிக்கெனத் தனிப்பொருள்
இல்லை. இப்படியே பரியது, கலிப்பது, சுறவது என்பனவும்
பகுதிப் பொருள் விகுதி கொண்டவை. 
 

(20)
 

9319.

தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்தம் 

தானை

பசும் புல் தண் தலம் மிதித்தலின், கரி படு மதத்தின் 

அசம்பின் சேறு பட்டு, அளறு பட்டு, அமிழுமால், 

அடங்க;

விசும்பின் சேறலின் கிடந்தது, அவ் விலங்கல்மேல் 

இலங்கை.

 

தசும்பின் பொங்கிய- குடம் போல ஓங்கிய; திரள் புயத்து
அரக்கர் தம் தானை
- திரண்ட தோள்களையுடைய அரக்கரின்
சேனை; பசும்புல் தண் தளம் மிதித்தலின் - பச்சைப் புல்லால் 
குளிர்ந்துள்ள தரையை மிதித்துப் போவதாலும்; கரிபடு மதத்தின் 
-  யானைகளிலிருந்து   பொழியும்   மதநீர்ப்   பெருக்கத்தாலும்; 
அசும்பின்  சேறுபட்டு
-   வழுக்கு   நிலத்துச்   சேறுபோல; 
அளறுபட்டு
- நெகிழும் சேறு உண்டாவதால்; அடங்க அமிழும் 
- எல்லாம் புதைபட்டுவிடும்; (ஆனால்) விசும்பின் சேறலின்
(சேற்றில் அமிழ்வதற்குத் தப்பி) யாவரும் விண்வழியே சென்றதால்; 
அவ் விலங்கல் மேல் இலங்கை- அந்தத் திரிகோண மலை 
மேல் இருந்த இலங்கை; கிடந்தது- (அமிழாமல்) இருந்தது.
 

ஆல் - அசை. 
 

(21)
 

சிவபிரானிடம் முறையிடுதல்
 

9320. 

படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர்  

வான்

முடியைப் பார்த்தனர்; பார்த்தனர், நெடுந் திசை 

முழுதும்;

வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்;  

மிடைந்த

கொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் 

குலைந்தார்.