வானவர்- தேவர்கள்; படியைப் பார்த்தனர்- நிலவுலகத்தைப் பார்த்தார்கள்; பரவையைப் பார்த்தனர - கடலிடத்தைப் பார்த்தார்கள்; படர் வான் முடியைப் பார்த்தனர் - எங்கெங்கும் பரவியுள்ள ஆகாயத்தின் உச்சியைப் பார்த்தார்கள்; நெடும் திசை முழுதும் பார்த்தனர்- நீண்ட திசைகள் முழுவதையும் பார்த்தார்கள்; வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்- (அரக்கர் சேனை இல்லா இடம்) ஒழிந்ததால் பார்ப்பதற்கு ஒரே ஒரு வெற்றிடத்தைக்கூட அவர்கள் காணவில்லை; மிடைந்த கொடியைப் பார்த்தனர் - நெருங்கிச் செறிந்த கொடிகளைப் பார்த்தார்கள்; வேர்த்தனர் குலைந்தார்- அச்சத்தால் உடல் வேர்த்தவராய் மனம் குலைந்தார்கள். |
(22) |
| 9321. | உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா, |
| அலகு இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? |
| அன்றேல் |
| விலகு நீர்த் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் |
| அலகு இல் பல் உருப் படைத்தனவோ?' என |
| அயிர்த்தார். |
| |
உலகில் நாம் அலா உரு எலாம்- உலகத்தில் நம்மைத் தவிர உள்ள எல்லா உருவங்களும்; இராக்கத உருவா- அரக்கர் உருவாகி; அலகு இல்பல் படை பிடித்து - அளவில்லாத பல வகைப் போர்க்கருவிகளை ஏந்தி; அமர்க்கு எழுந்தவோ- போர் செய்வதற்குப் புறப்பட்டு வந்தனவோ? அன்றேல் - அவ்வாறு இல்லையென்றால்; விலகு நீர்த்திரை- விலகிச் செல்லுகின்ற நீர் அலைகளையுடைய; வேலை ஓர் ஏழும் போய் - ஏழு கடல்களும் சென்று; விதியால் - முறைப்படி; அலகுஇல் பல் உருப் படைத்தனவோ - அளவில்லாத பல வடிவங்களை உண்டாக்கினவோ? என அயிர்த்தார் - என்று ஐயப்பட்டனர். |
(23) |
| 9322. | நடுங்கி, நஞ்சு அடை கண்டனை, வானவர், 'நம்ப! |
| ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம்; உயிரைப் |
| பிடுங்கி உண்குவர்; யார் இவர் பெருமை பண்டு |
| அறிந்தார்? |
| முடிந்தது, எம் வலி? என்றனர், ஓடுவான் முயல்வார். |