பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்9

காட்டிக் கொடுத்த கய்யனேன் நான்- உன்னைப் பகைவன்
கொல்ல   வழி   செய்து   கொடுத்த   சிறுமையனாகிய நான்;
உய்வனே!' என்று உரைக்கும் அங்கு ஓர் தலை - உயிர்
வாழ்ந்திருப்பேனோ?' என்று ஒருதலை சொல்லும்.
 

இராவணனுடைய பத்துத் தலைகளுள் மூன்று தலைகள் 
கூறியவை இங்கு   கூறப்பெற்றன. வாய் கூறியதைத் தலை 
கூறியதாகச்    சொன்னது    தானியாகுபெயர்.  கய்யன் - 
சிறுமையுடையவன். கை - சிறுமை. தான் செய்த செயலுக்குத் 
தானே பொறுப்பேற்று முந்திச் சென்று உயிர் விடாமல், தன் 
அன்புக்குரிய   மகனை   உயிர்   விடச்  செய்த சிறுமை 
இராவணனை வாட்டுகின்றது. 
 

(16)
 

9202.

'எழுவின் கோலம் எழுதிய தோள்களால் 

தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை; 

'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே! 

செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை. 

 

ஓர் தலை; 'எழுவின் கோலம் எழுதிய தோள்களால் -
இராவணனது ஒருதலை ''சந்தனக்கோலம் எழுதிய இரும்புத்தூண்
போன்ற தோள்களால்;  'தழுவிக்  கொள்கலையோ!' எனும்-
தழுவிக்கொள்ள மாட்டாயோ?'' என்று  சொல்லும்;  ஓர் தலை,
'செழு வில் சேவகனே! 'உழுவைப் போத்தை
- மற்றொரு 
தலை 'செழுமையான வில்லேந்திய வீரனே! ஆண்புலியை; உழை 
உயிர் உண்பதே!' எனும்
- பெண்மான் உயிர் வாங்குவதோ?' 
என்று சொல்லும்.
 

எழு - இரும்புத்தூண். உழுவைப் போத்து - ஆண்புலி. உழை -
பெண்மான்.  ஆடவர்  தோளுக்கு எழு - 'எழுவுறழ் திணிதோள்'
(பெருங் 2, 6, 131)  தோளில்  எழுதுதல்;  'எழிற்றோள்  எழுதி' 
(பெருங், 1, 34, 201)  வீரனுக்குப் புலிப்போத்து; 'புலிப்போத்தன்ன 
புல்லணற்காளை' (பெரும்பான். 138) 'வயப்புலிப் போத்தன்னார்' 
(பெரி. ஏனாதி 13) புலிப்போத்து, 'பொறி வரியிடும் புலிப்போத்து 
நவ்வி வெரீஇ' (பெருங், 1, 54, 37) 
 

(17)
 

9203.

'நீலம் காட்டிய கண்டனும், நேமியும் 

ஏலும் காட்டின் எறிந்த படை எலாம் 

தோலும் காட்டி, துரந்தனை; மீண்டும் நின் 

ஓலம் காட்டிலையோ!' எனும், ஓர் தலை.*