பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்121

181.

‘எம் குலத் தலைவர்கள். இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்.
மங்குநர் இல் என. வரம்பு இல் வையகம்.
இங்கு. நின் அருளினால். இனிதின் ஓம்பினேன்.

 

எம் குலத்தலைவர்கள்-எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும்;
இரவிதன்னினும்
-  தமது   குல  முதல்வனான  சூரியனை  விடவும்;
தம்குலம்   விளங்குற
-   தங்கள்   குலம்   விளக்க  முறும்படியாக;
தரணிதாங்கினார்
-   இவ்வுலகை  ஆதரித்துக்   காத்தனர்;  மங்குநர்
இல்என
-  புகழில்  மயங்கியவர்கள்  இல்லை  என்னுமாறு;  வரம்பில்
வையகம்   
-  எல்லைகாண  இயலாத  இவ்வுலகத்தை;  இங்கு  நின்
அருளினால்
-   இங்கு.    இவ்வயோத்தியிலிருந்தே  உனது  அருளின்
உதவியால்; இனிதின் ஓம்பினேன்- இனிமையுறக் காத்து வந்தேன்.

தலைவர்கள்:     குடிமக்களுக்குத்   தலைமை    பூண்டவர்களான
அரசர்கள்  சூரியன்  எங்கும்  வெப்பத்தையும்.   ஒளியையும்  பரப்பி.
உயிர்களைக்     காப்பது     போல.     சூரிய      குலவேந்தர்கள்
அச்சூரியனைக்காட்டிலும்   சிறப்பாகத்   தமது    குலத்தை  விளங்கச்
செய்தனர்  என்பது  கருத்து.  மங்குதல்: அழிதல்.  குறைதல்  என்னும்
பொருள்  உடையது.  இங்கு  ‘மங்குநர்’ புகழில்  குறைந்தவர்  என்னும்
பொருளில்  வந்தது.  தரணி.  ‘வையகம்’  இரண்டும்   உலகம்   என்ற
பொருள்  உடையன.  ‘மங்குநர்’  என்பதிலுள்ள  ‘நர்’   பெயர் விகுதி.
‘வையகம்’ வையம் எனவும் வழங்கப்பெறும்.                      2
 

182.

‘அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற.
உறு பகை ஒடுக்கி. இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.
 

அறுபதினாயிரம் ஆண்டும்-(நான் ஆட்சி செய்த) அறுபதினாயிரம்
ஆண்டுகளும்;  மாண்டு  உற- கழிந்து போகும்படி; உறுபகை ஒடுக்கி
இவ்  உலகை  ஓம்பினேன்
- உற்ற பகைவர்களை ஒடுங்குமாறு செய்து.
இவ்வுலகத்தைக்  காத்து வந்தேன்; பிறிது ஒரு குறை இலை- (எனக்கு)
வேறு ஒரு குறைவும் இல்லை; என்பின் வையகம்- எனது ஆட்சிக்குப்
பிறகு   இந்த   உலகம்;  மறுகுவது  என்பதோர்-  (நல்லாட்சியின்றி)
குழப்பமடைய  நேரிடும்  என்று ஒரு; மறுக்கம் உண்டு- மனக்கலக்கம்
(எனக்கு) இருக்கிறது.

‘மாண்டுஉற’     மாட்சி   பெற்றுப்  பொருந்த  என்று  கூறுதலும்
பொருந்தும்  ‘உறுபகை’  என்பதற்கு   நேரும்பகை  அல்லது மிகுபகை
என்றும்  பொருள்  கொள்ளலாம்.  உற்றபகை  என்பது பொருளானால்
வினைத்தொகை  மிக்க  பகை  என்பது  பொருளானால்   உரிச்சொல்
தொடர். நாட்டை அழிப்பதில்