பக்கம் எண் :

214பால காண்டம்  

சிலம்பொலி  போல;  நின்று  இரங்கு வார்புனல் - என்றும் நிலைத்து
ஒலித்துக்    கொண்டிருக்கும்.    பெருகிவரும்   நீரை  உடைய;  சரயு
எய்தினார்
- சரயு நதியை அடைந்தார்கள்.

வரங்கள்:     வேண்டிக்கொண்ட தவபலம். தவம்: புண்ணியமுமாம்.
தவம்   புரிந்தோர்   புகுவது   துறக்கமாதலின்.   இங்குப்   புரங்கள்
அமராவதியும்.   அளகாபுகரியும்  எனக்குறிப்பிடப்பட்டன.   இவையும்
அயோத்திக்கு  நிகராக  மாட்டா என்பதால் ‘’புரங்கள் நேரிலா நகரம்’’
என்றார்.  கோவை இந்நகரொடு என்று குறிக்கலாவது. ‘அத்தேவர்  தம்
நகரியைச்   செப்புகின்றதென்’   என   நகரப்  படலத்துள்   கூறுவது
நினைவுகூரத்தக்கது.  அரங்கு: நடனமண்டபம். ‘அன்ன’  உவமைஉருபு.
இரங்குதல்:  ஒலித்தல் நின்று இரங்கு வார்புனல் சரயு என்றதால்’  சரயு
எப்போதும்  ஒலித்துக்  கொண்டிருக்கும்’  நீர்ப்  பெருக்காறு  என்பது
புலனாகும். ‘அமரர் போற்றும் விழுநதி’ என்பார் பின்னும்          22
 

336.

கரும்பு கால் பொரக் கமுகு வார்ந்த தேன்
வரம்பு மீறிடு மருத வேலிவாய்.
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதிபோல்
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார்.

 

கரும்பு  கால்பொர-  கரும்புச்  சோலையிலே  காற்று  வீசுவதால்;
கமுகு  வார்ந்த  தேன்  
-  கமுகு  மரங்களிலே  பெருகிவரும் தேன்;
வரம்புமீறிடும்  
- வரப்பை மீறிச் செல்லும்படியான; மருதவேலிவாய் -
மருத  நிலங்களிலே;   அரும்பு   கொங்கையார்   -  தோன்றிவரும்
தனங்களையுடைய  இளமாதரது;  அம்மென்  ஒதிபோல்  -  அழகிய.
மென்மையான  கூந்தலைப்  போலக்  கறுத்த;  சுரும்பு  வாழ்வது ஓர்
சோலை  நண்ணினார்  
-  வண்டுகள்  வாழ்கின்ற  ஒரு  சோலையை
அம்மூவரும் அடைந்தனர்.

கால்:  காற்று. பொருதல்: வீசுதல். வார்ந்த: பெருகிய. வரம்பு: வரப்பு.
மருதவேலி: மருதநிலம். அரும்புதல்:  தோன்றுதல்.  அரும்பு கொங்கை’
வினைத்தொகையாம்.    ஓதி:   கூந்தல்.   வண்டின்  கரு  நிறத்துக்கு
உவமையாகக் கூறப்பட்டது.                                   23
 

337.

தாழும் மா மழை தவழும் நெற்றியால்
சூழி யானைபோல் தோன்றும் மால் வரைப்
பாழி மா முகட்டும் உச்சி. பச்சை மா
ஏழும் ஏற. போய் ஆறும் ஏறினார்.

 

தாழும் மா  மழை  - படிந்திருக்கின்ற பெரு மேகங்களை; தழுவும்
நெற்றியால்
- தழுவியிருக்கும் தாழ்வரைகளால்; சூழி யானை போல் -
முகபடாம்  அணிந்துள்ள யானையைப் போல; தோன்றும் மால்வரை -
காணப்படும்  பெரிய  மலையினது; பாழிமா முகட்டு உச்சி - பெருமை
பொருந்திய உயர்ந்த சிகரத்தின் உச்சியில்; பச்சைமா ஏழும்