பக்கம் எண் :

216பால காண்டம்  

7. தாடகை வதைப்படலம்
 

தாடகை     என்னும்  அரக்கியை   இராமபிரான்   விசுவாமித்திர
முனிவனது  விருப்பத்தின்படி கொன்றருளிய  கதையைக்  கூறும் பகுதி
இதுவாகும். அங்க நாட்டிலுள்ள காமன் ஆச்சிரமச்  சிறப்பை  முனிவன்
ராமனுக்குக் கூறுதலும். அங்குத் தங்கி  மறுநாள்  மூவரும் பாலைவனம்
ஒன்றை  அடைதலும்.  பாலையின்  வெம்மையைத் தாங்கும் பொருட்டு
இராம.   இலக்குவர்களுக்கு    விசுவாமித்திரன்   இரு  மந்திரங்களை
உபதேசித்தலும்  -   தாடகையின்  வரலாறு  கூறுதலும் - தாடகையின்
வருகையும்  - பெண் என நினைத்த  ராமன் கணைதொடாது நிற்றலும்.
முனிவன்  ராமனை  வேண்டுதலும்  -   முனிவன்  ஏவலுக்கு இராமன்
இசைதலும்-இராமன்    அம்பேவித்   தாடகையைக்   கொல்லுதலும் -
வானவர்   அதனால்   மகிழ்ந்து இராமனை வாழ்த்தலும் இப்படலத்துள்
விவரித்துக் கூறப்பட்டுள்ள செய்திகளாகும்.
 

339.
 

‘திங்கள் மேவும் சடைத்
   தேவன்மேல். மாரவேள்.
இங்கு நின்று எய்யவும்.
   எரிதரும் நுதல் விழிப்
பொங்கு கோபம் சுட. பூளை
   வீ அன்ன தன்
அங்கம் வெந்து. அன்று தொட்டு
   அனங்கனே ஆயினான்.
 

திங்கள் மேவும் சடைத் தேவன் மேல்- சந்திரனைத்  தாங்கியுள்ள
சடைமுடியையுடைய   தேவனாகிய சிவபிரான் மேல்; மார வேள் இங்கு
நின்று    எய்யவும்   
-   மன்மதன்.  மலரம்புகளை  இங்கு  இருந்து
எடுத்தெய்யவே;  எரிதரு  நுதல்  விழி - நெருப்பைக் கக்கும் நெற்றிக்
கண்ணில்;  பொங்கு  கோபம்சுட - பொங்கி எழுந்த சீற்றம் சுடுதலால்;
பூளை  வீ அன்ன தன் அங்கம்வெந்து
- பூளைப் பூப்போன்ற  தனது
உடல் முழுதும்   எரிந்து   போய்.  அன்று  தொட்டு  அனங்கனே
ஆயினான்
  -   அந்த   நாள்  முதல்  மன்மதன்  அங்க  மற்றவனே
ஆய்விட்டான்.

திங்கள்:    சந்திரன்.   சடைத்தேவன்:    சிவபிரான்.   மாரவேன்:
மன்மதன். ‘வேள்’ என்பதற்கு விரும்பத்தக்க  அழகுடையவன்  என்பது
பொருள்.  நுதல்  விழி:  ஏழாம்  வேற்றுமை  உருபும் பயனும்  உடன்
தொக்கத் தொகை. விழி: முதல்