பக்கம் எண் :

248பால காண்டம்  

வில்லை  ஏந்திய  மேகம்   போன்றவனான  இராமபிரான்மீது; பூமழை
பொழிந்து
-  மலர்மாரி  பெய்து;  வாழ்த்தி விண்ணவர் போயினார்-
அவனை வாழ்த்தித் தேவர்கள் சென்றனர். 

‘யாமும்’     என்பதிலுள்ள ‘உம்மை’ எதிரது தழீஇய எச்ச உம்மை.
யாம்:   தேவர்களாகிய   யாம்.  இருக்கை:  இருப்பிடம்   (உறையுள்).
பெற்றேம்  என்பது  தன்மைப்பன்மை வினைமுற்று. இடையூறு.  தீங்கு.
கோமகன்:  அரசகுமாரன்.  கொடுத்தி: முன்னிலை ஏவல்  வினைமுற்று
‘விற்கொண்ட  மழை’  இல்பொருள்  உவமையாம். பூமழை:  மலர்மாரி.
நாங்களும்   எங்கள்  இடங்களைத்  திரும்பப்  பெற்றோம்.   என்றது.
அரக்கர்கள்  அத்  தேவர்களை  விரட்டி.  அவர்களது   இடங்களைத்
தமக்கு   உரிமையாக்கிக்  கொண்டனர்.  அரக்கர்கள்  இனி  அழிதல்
திண்ணம் என்பதால் ‘யாமும் எம் இருக்கை பெற்றோம்’’ என்றர்.  கால
வழுவமைதி.                                              55