பக்கம் எண் :

  வேள்விப் படலம்249

8.வேள்விப்படலம்
 

விசுவாமித்திரன்   தனது  வேள்வியைச் செய்து முடித்ததைக் கூறும்
பகுதியாகும்.   தேவர்கள்   கூறியபடி    இராமனுக்கு  விசுவாமித்திரன்
படைக்கலம் தருவதும். அப்படைக் கலன்கள்   இளையவனைப் போலப்
பணிபுரிவோம்   என    முன்வருதலும்   பிறகு   மூவரும்   வேள்வி
செய்வதற்குரிய  இடம்   நாடிச்   சேர்தலும்   முனிவன்  வேள்வியைத்
தொடங்குவதும்  அரக்கர்  வருகையும்   முனிவர்கள்  ராமனைச் சரண்
அடைய  -  அவர்களைக்  கலங்க  வேண்டா  என்று  கூறி  இராமன்
அரக்கரை  அழித்தலும்  சுபாகுவைக்  கொன்று.   மாரீசனைக்  கடலில்
சேர்த்தும்.   விசவாமித்திரன்   இராமனைப்    பாராட்டுதலும்  சனகன்
வேள்வியைக்    காண    மூவரும்   மிதிலை    நோக்கிச்   செல்லத்
தொடங்குதலும் வேள்விப் படலத்துள் கூறப்படும் நிகழ்ச்சிகளாகும்.
 

394.விண்ணவர் போய பின்றை.
   விரிந்த பூமழையினாலே
தண்ணெனும் கானம் நிங்கி.
   தாங்க அருந் தவத்தின் மிக்கோன்.
மண்ணவர் வறுமை நோய்க்கு
   மருந்து அன சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே அன்ன.
   படைக்கலம் அருளினானே.

 

விண்ணவர் போய  பின்றை- தேவர்கள் வாழ்த்திச் சென்ற  பிறகு;
விரிந்த பூ  மழையினாலே  
-  தேவர்கள்  பொழிந்த  விரிந்த  மலர்
மாரியாலே; ‘தண்’ எனும் கானம் நீங்கி - குளிர்ந்த அந்தக் கானத்தை
விட்டகன்று; தாங்க  அரும்  தவத்தின்  மிக்கோன் - தாங்குதற்கரிய
தவம்  மிகுந்த விசுவாமித்திர முனிவன்; மண்ணவர் வறுமை நோய்க்கு
- உலகத்தவரின் ‘வறுமை’ என்னும் நோய்க்கு;  மருந்து அன சடையன்
வெண்ணெய்   அண்ணல்   
-   மருந்தைப்போன்றதான   சடையப்ப
வள்ளலாகிய  திருவெண்ணெய்   நல்லூர்  அண்ணலுடைய;  சொல்லே
அன்ன படைக்கலம்  அருளினான்  
-  சொல்லையே  போன்றதாகிய
படைக்கலங்களை இராம. இலக்குவர்களுக்கு ஈந்து அருளினான்.