பக்கம் எண் :

250பால காண்டம்  

‘’பின்றை’’    என்பது பின் என்பதன் மரூஉ. விண்ணவர்: தேவர்கள்.
விரிதல்: மலர்தல். தண்:தண்மை (குளிர்ச்சி).  கானம்:  கான்.  மிக்கோன்:
உயர்ந்தவன். வறுமை நோய்:  இல்லாமை நோய்.  ‘வெண்ணெய்ச்சடைய
அண்ணல்தன்  சொல்’  -  மண்ணவர்  வறுமை  நோய்க்கு மருந்தாகும்
என்பது     கருத்து.    படைக்கலத்துக்குச்   சொல்   உவமையாயிற்று.
அருளுதல்: ?கொடுத்தல். அன. அன்ன: என்பன உவமை உருபுகள்.

விண்ணவர்   இராமனை  வாழ்த்திச்  சென்றபின் -   விசுவாமித்திர
முனிவன்   -   இராம.   இலக்குவர்களுக்குத்  தேவர்கள்    கூறியபடி
படைக்கலங்களைக் கொடுத்தருளினான் என்பது பொருளாகும்.        1
 

395.ஆறிய அறிவன் கூறி
   அளித்தலும். அண்ணல்தன்பால்.
ஊறிய உவகையோடும்.
   உம்பர்தம் படைகள் எல்லாம்.
தேறிய மனத்தான் செய்த
   நல்வினைப் பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி
   வருவபோல். வந்த அன்றே.

 

ஆறிய அறிவன் கூறி அளித்தலும்- துயர்தீரப்பெற்ற  அறிவனாகிய
முனிவன்   உரிய  மந்திரங்களைக் கூறி. ஈந்ததும்; உம்பர்தம் படைகள்
எல்லாம்  
-   தெய்வத்தன்மை   உடைய  அப்படைக்கலன்களெல்லாம்;
தேறிய  மனத்தான்  செய்த  
-  தெளிந்த  மனம் உடையவன் முன்பு
செய்த;   நல்வினைப்   பயன்கள்  எல்லாம்  -  நல்வினைப்  பயன்
அனைத்தும்; மாறிய  பிறப்பில்  தேடிவருவ  போல்  - மாறி எடுத்த
அடுத்த   பிறவியிலும்   செய்தவனைத்   தேடிவந்து  அடைவது போல;
ஊறிய  உவகை  யோடும்  
- ஊற்றம் மிக்க களிப்போடும்; அண்ணல்
தன்பால் வந்த
- பெருமைமிகுந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தன.

ஆறிய:  துயர் நீங்கிய. இந்திரியச் செயல்கள் தணியப்பெற்ற எனவும்
கூறுதல்  பொருந்தும்.  அறிவன்:  ஞானி.  கூறி அளித்தல்:  உபதேசம்
செய்து  கொடுத்தல்.  செய்த:  முற்பிறப்பில்  செய்த.   மாறிய  பிறப்பு:
வேறாகிய  பிறப்பு.  அன்று. ஏ: அசைகள்.  விசுவாமித்திர  முனிவன் -
கூறி  அளித்தலும்  -  படைகள்  நல்வினைப்பயன்  செய்தவனை  நாடி
வந்தடைதல் போல வந்தன என்பது கருத்து.                     2
 

396.‘மேவினம்; பிரிதல் ஆற்றேம்;
   வீர! நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும்.
   இளையவன் போல’ என்று
தேவர்தம் படைகள் செப்ப.
   ‘செவ்வியது’ என்று அவனும் நேர.