பக்கம் எண் :

  வேள்விப் படலம்251

   

பூவைபோல் நிறத்தினாற்குப் புறத்தொழில்
   புரிந்த அன்றே.

 

வீர!  மேவினம் பிரிதல் ஆற்றேம்  -  வீரனே!  நாங்கள்  வந்து
உன்னை  அடைந்தோம்.  பிரிதல்  செய்யோம்;  நீ விதியின்  எம்மை
ஏவின  செய்து  
-  நீ  முறைப்படி  எங்களை  ஏவிட்ட  காரியத்தைச்
செய்து;  இளையவன்  போல  நிற்றும்  என்று  -  இளையவனாகிய
இலக்குவனைப்போலப்   பணிபுரிந்து   நிற்போம்   என்று  படைக்கலத்
தேவதைகள்  கூற; அவனும்  செவ்விது என்று நேர - இராமபிரானும்
நல்லது.  என்று  ஒப்புக்கொள்ள;  பூவை  போல்  நிறத்தினாற்கு  -
காயாம்பூவைப்  போன்ற நிறம் கொண்ட இராமபிரானுக்கு; புறத்தொழில்
புரிந்த
- ஏவல் தொழிலைச் செய்திருந்தன.

மேவினம்.   ஆற்றேம் என்பன தன்மைப் பன்மை  வினைமுற்றுகள்.
பிரிதல்:  தொழிற்பெயர்.  விதியின்  முறைப்படி.  நிற்றும்:    செவ்விது:
அழகிது.  நேர: ஒப்ப. பூவை: காயாம்பூ. புறத்தொழில்: ஏவல்   தொழில்.
தெய்வப்படைக்   கலங்களுக்குரிய  தேவதைகள்  இராமனை   நோக்கி
‘’வீரனே! நாங்கள் உன்னை அடைந்தோம். இனிப்பிரிய மாட்டோம்.  நீ
ஏவிய  பணியைச்  செய்து  இலக்குவனைப்  போல.  நிற்போம்   என்.
இராமனும்   அழகிது  என்று  ஒப்புக்  கொள்ள  -   அப்படைக்கலத்
தேவதைகள்  இராமனுக்கு  ஏவல்தொழிலைச்  செய்திருந்தன   என்பது
பொருள்.                                                  3
 

397.இனையன நிகழ்ந்த பின்னர்.
   காவதம் இரண்டு சென்றார்;
அனையவர் கேட்க. ஆண்டு ஓர்
   அரவம் வந்து அணுகித்தோன்ற
‘முனைவ! ஈது யாவது?’ என்று.
   முன்னவன் வினவ. பின்னர்.
வினை அற நோற்று நின்ற
   மேலவன் விளம்பலுற்றான்;
 

இனையன  நிகழ்ந்த பின்னர்  -  இவையெல்லாம்   நடந்த பின்பு
காவதம்  இரண்டு சென்றார்  -  இராமன் முதலிய  மூவரும் இரண்டு
காததூரம்  நடந்து  சென்றனர்; ஆண்டு அனையவர் கேட்க - அங்கு
அந்த    மூவரும்    கேட்டுகும்படியாக;    ஓர்    அரவம்   வந்து
அணுகித்தோன்ற  
-  ஒருபெருத்த குரல் பக்கத்தே எழ; முனைவ! ஈது
யாவது  என்று  முன்னவன் வினவ
- முனிவரே இந்த ஓலம் எதனால்
தோன்றியது  என ராமன் கேட்க; பின்னர் வினை அற நோற்று நின்ற
மேலவன்  விளம்பல் உற்றான்
- பின்பு. இரு வினையும் நீங்கத் தவம்
செய்து மாமுனிவனாக நின்ற விசுவாமித்திர முனிவன் சொல்லானான்.