பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 181

4. நகர் நீங்கு படலம்

     தயரதன்பால் கைகேயி கொண்ட வரத்தால் இராமன் காட்டிற்குச்
செல்ல அயோத்தி நகரைவிட்டு நீங்கிச் செல்வதைச் சொல்லும் பகுதி
ஆதலின் நகர் நீங்கு படலம் எனப் பெயர்பெற்றது.

     இனி, இராமன் காடு செல்லும்பொழுது அயோத்தி நகர மக்கள்
அனைவரும் அவனுடனே சென்றதாகக்கூறுதலின் நகரமே நீங்குகிற படலம்
என நயப்பொருள் உரைக்கவும் பெறும்.

     கைகேயி வரத்தால் காடுசெல்லப் புக்க இராமன் தன் தாய்
கோசலையிடம்  விடைபெறச்செல்கிறான்.  செய்தி அறிந்த கோசலை
வருத்தம்  உற, அவளை இராமன் தேற்றுகிறான்.‘வனத்திற்கு யானும் உடன்
வருவேன்’ என்ற கோசலையைத் தடுத்துப் பேசுகிறான்.  பின்னர்இராமன்
சுமித்திரை மாளிகைக்குச் செல்கிறான். கோசலை இராமன் வனம் புகுவதைத்
தடுக்கத்தசரதன்பால் செல்கிறாள். தசரதன் சோகநிலை கண்டு கோசலை
வருந்துகிறாள்.  கைகேயி மூலம்வசிட்டன் நிகழ்ந்ததை அறிகிறான்.
தயரதனைத் தேற்றி, வசிட்டன் கைகேயிக்கு அறிவுரை கூற, அவள் மறுத்து
மொழிய,  அவளைக் கடிந்து பேசுகிறான்.  தசரதன் ‘கைகேயி என் தாரம்
அல்லள், பரதன் உரிமைக்கு ஆகான்’ எனப் பேசுகிறான். தயரதன் மேலும்
வருந்த, வசிட்டன் அவனைத்தேற்றி அகல்கிறான். கணவன் நிலை கண்டு
வருந்துகிற கோசலையிடம் தயரதன் தன் பழைய சாபவரலாற்றைக்
கூறுகிறான்.

     வசிட்டன் அரசவை சேர்ந்து நிகழ்ந்தவற்றைக் கூறுகிறான்.  இராமன்
காடு செல்வது கேட்டமக்கள் துயரம் அடைகிறார்கள்.  இலக்குவன் சீற்றம்
அடைகிறான்;  போர்க்கோலம்பூணுகிறான்.  இலக்குவனுடன் இராமன்
உரையாடிச் சீற்றம் தணிக்கிறான். இருவரும் சுமித்திரைஅரண்மனையை
அடைகின்றனர்.  அங்கே கைகேயி மூலம் வந்த மரவுரியை இலக்குவன்
பெற்றுத் தன் தாயைவணங்க, அவளும் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள்.
இராமன் தடுத்தும் வணங்க, அவளும் அவனுக்கு அறிவுரைகூறுகிறாள்.
இராமன் தடுத்தும் கேளாது  இலக்குவன் உடல் புறப்படுகிறான்.  வசிட்டன்
இராமனைக்கான் ஏகாது தடுக்க முயல்கிறான். இராமன் மறுத்துப்
புறப்படுகிறான். மக்கள் துயரம்மேலிடப்பெறுகிறார்கள் அரசன் தேவியர்
அழுகிறார்கள், இராமன் தன் அரண்மனை செல்கிறான். இராமனைக்
கண்டார்  வருந்துகின்றனர்.  நகர் பொலிவழிகிறது.  இராமன் சீதையைக்
காண்கிறான்.  அவள் நடுக்கம் அடைகிறாள்.  செய்தி அறிந்த சீதை
‘கானகத்துக்கு யானும் உடன்வருவேன்’ என்கிறாள். இராமன் தடுக்கவும்
கேளாது மரவுரி உடுத்துப் புறப்படுகிறாள். இராமன்,சீதை, இலக்குவன்
மூவரும் புறப்படுகிறார்கள்,  நகர மாந்தர் அனைவரும் இராமனைப் பின்
தொடர்ந்து  அயோத்தி நகரை நீங்கிக் காடு நோக்கிச் செல்கின்றனர்.
இராமன் தாயரைக்கும்பிட்டு மன்னனைத் தேற்றுமாறு கூறி, அவர்கள் ஆசி