பக்கம் எண் :

312அயோத்தியா காண்டம்

5. தைலம் ஆட்டு படலம்

     தயரதன் உடலைத் தைலத்தில் மூழ்குவித்து  வைத்திருந்தமையைக்
கூறும் படலம் என்பது பொருள்.  இராமன் வனம் புகும் செய்தி கேட்டு
இறந்துபோன தசரதனது  உடம்பை, கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத
சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் அளவும் கெடாமல்
இருத்தற்பொருட்டுத்தைலத்தில் இட்டு வைத்தகைக் கூறுவதனால் தைலம்
ஆட்டு படலம் எனப்பட்டது. ஆட்டுதல் ‘நீர்ஆட்டுதல்’ என்பது  போல
அல்லாமல்,  தைலத்தில் இடுதல் ஆட்டுதல் எனப் பெற்றது.

     நகர  மாந்தர் தொடர இராமன் தேரில் வனம் சேறலும்,  இரவில்
அனைவரும் வனத்தில்துயில் கொள்ளும்பொழுது  இராமன் சுமந்திரனைத்
தேருடன் நகர் திரும்பச் சொல்லுதலும்,சுமந்திரன் மறுத்து வருந்த, இராமன்
தேற்ற,  மூவரும் கூறிய செய்திகளுடன் சுமந்திரன் தேரைஅயோத்திக்குத்
திருப்பிக்கொண்டு சேறலும், இரவில் மூவரும் வழிநடந்து இரண்டு யோசனை
தூரம்காட்டிற்குள் சென்றுவிடலும், நகர் திரும்பிய சுமந்திரன் வசிட்டனிடம்
செய்தி சொல்ல,வசிட்டன் சுமந்திரனோடு தசரதனை அணுக, தசரதன்
மூர்ச்சை தெளிந்து முனிவனை வினவ, முனிவன்பேசாது அகல, சுமந்திரன்
இராமன் வனம் புகுந்த செய்தி சொல்ல,  தசரதன் உயிர் துறத்தலும்,
கோசலை, சமித்திரை, தேவிமார் புலம்பலும்,  சுமந்திரனால் செய்தி அறிந்த
வசிட்டன்வருந்திக் கேகய நாடு சென்ற பரத சத்துருக்கனர் திரும்ப வந்து
ஈமக்கடன் செய்யும் அளவும்கெடாமல் இருக்கத் தசரதனது  உடலைத்
தைலத்தில் இடுதலும்,  பரதனுக்கு ஓலை அனுப்புதலும், இராமனுடன் காடு
சென்ற நகர மக்கள் காலையில் விழித்து இராமனைக் காணாது தேர்ச் சுவடு
அயோத்தி செல்வது  நோக்கி இராமன் அயோத்தி செல்வது  நோக்கி
இராமன் அயோத்திதிரும்பியதாக மகிழ்ந்து  நகர் புகுதலும்,  இராமன்
திரும்பாமையும்,  தசரதன் இறப்பும் அறிந்து வருந்திய நகர மாந்தரை
வசிட்டன் தேற்றுதலும் ஆகிய செய்திகள் இதனுள் கூறப் பெற்றுள்ளன.

நகர மாந்தர் தொடர இராமன் தேரில் சேறல்  

கலிவிருத்தம்

1840.ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால்.

     ஏவிய குரிசில்பின் - (தந்தையால்) ஏவப்பெற்றுக் காடு செல்லும்
இராமனைத்தொடர்ந்து; ஏகிலார் - உடன் செல்லாதவர்கள்;