பக்கம் எண் :

ஆறு செல் படலம் 551

11. ஆறு செல் படலம்

     இராமன் காட்டிற்குப் பயணப்பட்டுச் சென்ற வழியில் பரதனும்
அவனைச் சார்ந்தவர்களும்செல்வதைச் சொல்கிற படலம் என்பது ஆறு
செல் படலம்  என்பதன் பொருளாகும். ஆறு - வழி.

     வசிட்டன் பரதன் மருங்குள்ளான் என்றறிந்த மந்திரத் தலைவர்கள்
அங்கு வந்துசேர்கிறார்கள்.  மூத்த அமைச்சனாகிய சுமந்திரன்  குறிப்பை
உணர்ந்த வசிட்டர்  பரதனைநோக்கி ‘அரசு  ஏற்று உலகைக் காப்பாற்றக்’
கோருகிறார்.  பரதன் அது கேட்டு உளம் நடுங்கிமனம் வெதும்பி
‘இந்நாட்டுக்கு இனி இராமனே அரசன்; அவனைக் கொண்டுவந்து
முடிசூட்டிக் காண்பதேமுறை; அது இயலாவிடின் அவனோடு காட்டில்
தவம் செய்வேன்;  வேறு கூறின் உயிரை விடுவேன்’என்கிறான். அது
கேட்ட அரசவையோர்  மகிழ்ச்சி அடைந்து  பரதனைப் பாராட்டுகிறார்கள்.
இராமனை அழைத்துவரச் சத்துருக்கனன் மூலம் முரசு அறைவிக்கிறான்
பரதன், முரசொலி கேட்டு மக்கள்மகிழ்ச்சியுடன் புறப்படுகிறான். இடையில்
உடன்வந்த கூனியைச் சத்துருக்கனன் பற்றிக்கொல்ல  முயல,  பரதன்
தடுக்கிறான். பரத சத்துருக்கனர்களும் உடன் வந்தோரும் இராமன் முன்பு
தங்கிய சோலையில் (1846) தங்குகிறார்கள். இரவு தங்கிப் பின்னர்
ஊர்திகளில் செல்லாமல்இராமன் நடந்து சென்ற வழியில் சேனைகள்
தொடரப் பரதன் நடந்து செல்கிறான் என்னும்செய்திகள் இங்குக்
கூறப்படுகின்றன.

மந்திரக் கிழவர் முதலியோர் அரசவை அடைதல்  

கலிவிருத்தம்

2244.வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும், ஆண்டையான், என,
விரைவின் வந்து ஈண்டினர்; விரகின் எய்தினர்;
பரதனை வணங்கினர்; பரியும் நெஞ்சினர்.

    வரன்முறை தெரிந்து உணர் - அரச குலத்தின் மரபு முறைகளை
ஆராய்ந்து உணர்ந்த; மறையின் மாதவத்து
- வேதவழியில் செய்யப்படும்
தவங்களைச் செய்துள்ள; அருமறை முனிவனும் - வேதத்திற்சிறந்தவசிட்ட
முனிவனும்; ஆண்டையான் என - (பரதன் உள்ள) அவ்விடத்தில்
இருக்கின்றான் என்றறிந்து; விரகின் எய்தினர் -