பக்கம் எண் :

140ஆரணிய காண்டம்

5. சூர்ப்பணகைப் படலம்

     சூர்ப்பணகையின் செய்தியைக் கூறும் பகுதியாகும். பஞ்சவடியில்
சூர்ப்பணகை இராமனைக் கண்டு அவன் மேல் ஆசை கொண்டு அதனால்
அவள் அடைந்த துன்பத்தைக் கூறுவது இப்படலம். சூர்ப்பம் ஸ்ரீநகம் எனப்
பிரித்து முறம் போன்ற நகம் உள்ளவள் என்று பொருள் கூறுவர். சூர்ப்பம்
எனில் இரத்தம் நிறைந்த கலம். அதனைக் கொண்டு யாகம் முதலிய
நற்செயல்களைக் கெடுப்பவள். நகா எனில் கெடுப்பவள் என்று பொருள்.
அரக்கர்கள் முனிவர்களின் யாகத்தின் தூய்மையைக் கெடுக்க இரத்தம்
இறைச்சி முதலியவற்றைச் சொரிவர். இவ்வாறு யாகத்தை அழிப்பவளாக
சூர்ப்பணகையின் பெயர்ப் பொருள் காண்பர் சிலர்.

     இப்படலத்தைப் பஞ்சவடிப் படலம் என்றும், சூர்ப்பநகி மூக்கரி
படலம் என்றும் இரண்டாகக் கொள்வர். வேறு சிலர் இவ்விரண்டின்
இடையில் சூர்ப்பணகைப் படலம் என ஒன்றை சேர்த்து மூன்றாகவும்
கொள்வர்.

     சூர்ப்பணகை பிரமனின் மகளாகிய புலத்திய முனிவரின் மகனாம்
விசிரவசுவுக்கும் அவரின் இரண்டாம் மனைவியாம் கேகசிக்கும் பிறந்த
மகள். இவளுடைய அண்ணன்மார் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.
தம்பி வீடணன். இவள் கணவன் காலகேயரைச் சார்ந்த வித்யுச்சிகுவன்.
இராவணன் காலகேயருடன் போரிட்ட போது வித்யுச்சிகுவன் கொல்லப்
பட்டான். கணவனை இழந்த சூர்ப்பணகை இராவணனிடம் முறையிட
அவளுக்கெனத் தண்டகாருணியப் பகுதியி்ல் ஓர் அரசுண்டாக்கி அதில்
அவள் சிறப்புடன் இருக்கக் கூறித் தூடணனைச் சேனாதிபதியாக்கி ஒரு
பெரும் படையையும் அவளுக்குத் துணையாக்கினான். தன் தாய் மாமன்
மகனாம் கரனையும் அவளுக்குத் துணையாக்கி அவள் விருப்பப்படி
இருக்குமாறு செய்தான்.

     அதனால் அங்குக் குடியிருந்து அங்குள்ள மக்களை வருத்தி
இன்புற்று வந்தாள் சூர்ப்பணகை. அப்போது அவள் பஞ்சவடியில் சீதை
இலக்குவருடன் வாழ்ந்த இராமனின் திருமேனி அழகைக் கண்டு பெருங்
காமம் கொண்டு, அழகிய பெண் வடிவெடுத்து அவனிடம் சென்று தன்னைக்
கூடுமாறு வேண்டினாள். அதற்கு இராமன் உடன்படாது பலவாறு மறுத்தான்.
அவ்வாறு தன்னை இராமன் மறுத்ததற்குக் காரணம் அவன் மனைவி
பேரழகு படைத்தவளாய் இருப்பதுதான் என எண்ணிச் சீதையை
வஞ்சனையாக எடுத்து மறைத்து வைத்தால் இராமனுடன் கூடி வாழ முடியும்
என நம்பினாள். மறுநாள் காலையில் இராமன் வெளியே சென்ற போது
சீதையைக் கவரத் தொடர்ந்து சென்றாள். இலக்குவன் அதைக் கண்டு
வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி மூக்கு, காது முலை ஆகிய
உறுப்புகளை அறுத்து விட்டான். பெண் கொலை பாவம் என அவளைக்
கொல்லாது விட்டான். பேரோலமிட்டுச் சூர்ப்பணகை இராமனிடம் தன்னை
மணம் செய்ய வேண்டினாள் அல்லது இராமன் தன் தம்பிக்காவது தன்னை