பக்கம் எண் :

194ஆரணிய காண்டம்

நல் பொறை நெஞ்சில் இல்லாக்
     கள்வியை நச்சி?' என்றாள்.

    பொற்புடை அரக்கி - அழகிய வடிவைக் கொண்ட அரக்கியாம்
சூர்ப்பணகை; பூவில் புனலினில் பொருப்பில் வாழும் அற்புடை
உள்ளத்தாரும் அனங்கனும் மற்றும் அமரர் -
தாமரை மலரிலும்
பாற்கடலிலும் கயிலை மலையிலும் வாழ்கின்ற என்பால் அன்பு கொண்ட
மனமுள்ள நான்முகன், திருமால், சிவன் ஆகியோரும் மன்மதனும் பிற
தேவர்களும்; எற்பெறத்தவம் செய்கின்றார் - என்னை மணக்கத் தவம்
செய்து வருகின்றனர்; நல்பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி -
நன்மை தரும் பொறுமையை மனத்தில் கொள்ளாத இவ்வரக்கியை விரும்பி;
என்னை நீ இகழ்வது என்னே என்றாள் - என்னை நீ புறக்கணிப்பது
எக்காரணம் பற்றியோ? எனக் கேட்டாள்.

     மூவரையும் தேவரையும் கருதாமல் உன்னை நாடி வந்த என்னை நீ
புறக்கணிப்பது சரியன்று எனச் சூர்ப்பணகை இராமனுக்கு உணர்த்த
விரும்பினாள். பூவில் என்பதற்கு நிலவுலகில் வாழும் மாந்தரும், புனலில்
என்பதற்கு நீரர மக்களும், மலையில் என்பதற்கு மலையில் வாழும்
வித்தியாதரரும் எனப் பொருள் கூறுவாரும் உளர். சீதையை நல்பொறை
நெஞ்சில் இல்லாக் கள்வி எனக் கூறியது இராமன் உளத்தில் அவளது தீய
பண்பைக் கூறி விலக்க நினைத்ததாம். இதனால் தானே கள்வி என்பதையும்
உணர்த்தி நிற்கிறாள். இதுவே நாடக அங்கதமாகும். அற்பு - அன்பு
என்பதன் திரிந்த வடிவம்.                                     68

2800.'தன்னொடும் தொடர்வு இலாதேம்
     என்னவும் தவிராள்; தான்இக்
கல் நெடு மனத்தி சொல்லும், கள்ள
    வாசகங்கள்' என்னா,
மின்னொடு தொடர்ந்து செல்லும்
     மேகம்போல், மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய், அப்
     பூம் பொழிற் சாலை புக்கான்.

    இக்கல் நெடு மனத்தி தன்னொடும் - இந்தக் கல் போன்ற கடின
மனம் கொண்ட இவளோடும்; தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் -
எத்தகைய தொடர்பும் இல்லாதவர் எனக் கூறியும்; தான் - இவள் தானும்,
கள்ள வாசகங்கள் சொல்லும் என்னா - வஞ்சகச் சொற்களை இவள்
மேலும் சொல்லுவாள் என்று எண்ணி; புனிதன் - தூயோனாம் இராமன்;
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் - மின்னல் பின்னே
தொடர மேகம் முன்னே செல்வது போல்; மிதிலை வேந்தன்
பொன்னொடும் போய் அப்பூம் பொழிற் சாலை புக்கான் -
மிதிலை
மன்னனாம் சனகனின் மகள் சீதையுடன்