பக்கம் எண் :

2ஆரணிய காண்டம்

1. விராதன் வதைப் படலம்

     விராதன் எனும் அரக்கனை இராமபிரான் வதைத்தருளியதைக் கூறும்
படலம். இவன் தும்புரு எனும்கந்தருவன். குபேரனின் சாபத்தால்
அரக்கனாகிக் காட்டில் திரிந்தவன். விராதன் மிகுதியும்அபராதம் செய்பவன்.
சீதையைத் தூக்கிச் சென்ற இவன் தன்னை எதிர்த்த இராமலக்குவரைக் கண்டு
சீதையை விட்டு விட்டு அவர்களைத் தூக்கிச் சென்றான். அவர்கள் அவன்
தோள்களை வெட்டிப்பள்ளத்தில் புதைத்தருளினர்.

     இராமன் முதலியோர் அத்திரி முனிவர் உறையுள் அடைதல்

2517.முத்து இருத்தி அவ் இருந்தனைய
     மொய்ந் நகையொடும்,
சித்திரக் குனி சிலைக் குமரர்,
     சென்று அணுகினார்-
அத்திரிப் பெயர் அருந்தவன்
     இருந்த அமைதி,
பத்திரப் பழுமரப் பொழில்
     துவன்று, பழுவம்.

    சித்திரக் குனிசிலைக் குமரர் - அழகிய, வளைந்த வில்லேந்திய
இராமலக்குவர்; முத்து இருத்தி அவ் இருந்து அனைய - முத்துக்களைப்
பதித்து அவைஒருசேர இருந்தாற் போன்ற; மொய்ந்நகை யொடும் -
நெருங்கிய பற்கள் கொண்டசீதையுடன்; அத்திரிப் பெயர் அருந்தவன் -
அத்திரி என்னும் பெயருடைய செயற்கரியதவம் செய்த பெருமுனிவன்;
இருந்த - தங்கியிருந்த; அமைதி -இடமாகிய; பத்திரப்பழுமரப் பொழில்-
இலையும் பழமும் நிறைந்த மரங்கள்உள்ள சோலைகள்; துவன்று- நெருங்கி
விளங்கும்; பழுவம் - வனத்தை; சென்றுஅணுகினார் - போய்
அடைந்தனர்.

     அத்திரி என்னும் முனிவர் பிரமகுமரர்களுள்ஒருவர் ஏழு
முனிவர்களுள் முன்வைக்கப்படுபவரும் ஆவர். இவரை இராமன் சந்தித்தது
வான்மீகத்தில்அயோத்தியா காண்ட முடிவில் உளது. வில்லுக்குச்
சித்திரமாவது இராமலக்குவர் கையில்ஏந்தியிருத்தல். பழுமரம் ஆலமரமுமாம்.
பழுவம் உறையுளுமாம்.                                          1