பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 3

2518.திக்கு உறும் செறி பரம்
     தெரிய நின்ற, திரள்
பொன்கைக் குறுங் கண்
     மலைபோல், குமரர் காமம் முதல் ஆம்
முக் குறும்பு அற எறிந்த வினை
     வால், முனிவனைப்
புக்கு இறைஞ்சினர் அருந் தவன்
     உவந்து புகலும்

    திக்கு உறும் - எட்டுத் திசைகளிலும் பொருந்திய; செறிபரம் - மிகுந்த
சுமையை; தெரிய நின்ற - இவ்வளவு என அறியுமாறு தாங்கி நின்ற, திரள்
பொன்கை -
திரண்ட அழகிய துதிக்கையையும், குறுங்கண் - சிறிய
கண்களையும் உடைய; மலைபோல் குமரர் - யானைகள் போன்ற
இராமலக்குவர்; புக்கு - அம்முனிவர் உறையுள்புகுந்து; காமம் முதல் ஆம்
முக்குறும்பு அற எறிந்த -
காமம், வெகுளி, மயக்கம்எனும் மூன்று
குற்றங்களையும் அடியோடு கடிந்த; வால் வினை முனிவனை - தவவினை
உடையதூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை;
இறைஞ்சினர் - வணங்கினார்கள்;அருந்தவன் - அம்முனிவன்; உவந்து
புகலும் -
மனமகிழ்ந்து சொல்வான்.

     திக்குறு மலை என்பது எட்டுத் திசைகளிலுள்ளயானைகள்.
முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம். (குறள் 360). அம்மூன்று குற்றங்கள்
இல்லாதவன். அ+திரி=அத்திரி, மலை-ஆகுபெயர். புகலும்-செய்யும் என்னும்
முற்று ஆண்பாலுக்குவந்தது.

     வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் (இராமானுச நூற்றந்தாதி).   2

2519.‘குமரர்’! நீர் இவண் அடைந்து
     உதவு கொள்கை எளிதோ?
அமரர் யாவரொடும், எவ்
     உலகும் வந்த அளவே!
எமரின் யார் தவம் முயன்றவர்கள்?’
     என்று உருகினன்-
தமர் எலாம் வர, உவந்தனைய
     தன்மை முனிவன்.

    தமர் எலாம் வர உவந்தனைய -தம் சுற்றத்தார் யாவரும் வர அது
கண்டு மகிழ்ந்தாற் போல; தன்மை முனிவன் -மகிழ்ச்சி நிலை அடைந்த
அத்திரி முனிவர்; (இராமலக்குவரைக் கண்டு); ‘குமரர்! நீர் இவண்
அடைந்து உதவு கொள்கை -
தயரதன் மக்காள்! நீங்கள் இவ் விடத்தில்
வந்து பெரும்பேறடையஅருளிய (நீங்கள் இங்கு வந்தது) தன்மை; எளிதோ-
(எங்களுக்கு) கிடைத்தற்கு எளியதோ?; அமரர் யாவரொடும் எவ்வுலகும்