பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 5

விராதன் எதிர்ப்படுதல்

2521.எட்டொடு எட்டு மத மா கரி,
     இரட்டி அரிமா,
வட்ட வெங் கண் வரை ஆளி
     பதினாறு, வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன
     செறிந்தது ஒருகைத்
தொட்ட முத் தலை அயில் தொகை,
     மிடல் கழுவொடே.

    எட்டொடு எட்டு - பதினாறு; மதமாகரி - மதங்கொண்ட பெரிய
யானைகள்; இரட்டி அரிமா - அவற்றிற்கு இருமடங்காம் முப்பத்திரண்டு
சிங்கங்கள்; வட்டவெங்கண் -வட்டமான கொடிய கண்களையுடைய; வரை
ஆளி பதினாறு -
மலையில் வாழும் பதினாறு யாளிகள்;வகையின் - தன்
வகைமையால்; கிட்ட இட்டு - நெருங்கக் கோத்திட்டு; இடைகிடந்தன -
இடையே நெருங்கிக் கிடந்தனவாக; செறிந்தது ஒருகைத் தொட்ட -
திரண்டதான தன் ஒரு கையால் பிடித்த; முத்தலை அயில் தொகை -
மூன்று தலைகளையுடையமிக்க கூர்மையுடன் கூடிய; மிடல் கழுவொடு -
வலிமைமிக்க சூலாயுதத்துடன், -அசை.

     விராதன் உண்ண யானை முதலியவற்றைத் தன் சூலத்திற் கோத்து
எளிதிற் பிடித்திருந்தான்.எட்டொடு எட்டு என்பதை அறுபத்து நான்கு
என்பர் சிலர். தொட்ட - பெரிய எனும் பொருள் தரும்திசைச் சொல்லுமாம்,
ஆளி என்பது உறுப்புகளால் யானையும் சிங்கமும் சேர்ந்து சிறகும் கொண்டு
காணப் பெறும் விலங்கு.                                         5

2522.செஞ் சுடர்ச் செறி மயிர்ச் சுருள்
     செறிந்த செனியன்,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை
     நடந்த தென, மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி
     வாத விசையில்
பஞ்சு பட்டது பட, படியின்
     மேல் முடுகியே.

    செஞ்சுடர் - சிவந்த ஒளியுடைய; செறிமயிர்ச் சுருள் செறிந்த -
அடர்ந்தசுருட்டை மயிர்கள் கொண்ட; செ(ன்)னியன் - தலையுடையனாகி;
நஞ்சு வெற்பு உருவுபெற்று - நஞ்சு, மலையின் வடிவைக் கொண்டு;
இடை நடந்தது என -
அவ்வனத்திடைநடந்தது போல; மாமஞ்சு சுற்றிய
வயங்குகிரி -
பெரிய மேகம் சூழ்ந்து விளங்கும்மலைகள், (கால்களின்