பக்கம் எண் :

728ஆரணிய காண்டம்

12. கவந்தன் படலம்

    கவந்தன் என்பவனின் தொடர்பு கொண்ட செய்தியைக் கூறும்
படலம் இது. 'கபந்தன்' என்ற வடமொழிச் சொல் தமிழ் ஒலி பெற்றுக்
'கவந்தன்' என நின்றது. கபந்தம்; தலையற்ற உடல். தலை எனத் தனி
உறுப்பு இன்றி, வயிற்றிலே வாய், கண் முதலானவை உடையவனாய்
இருந்த ஒரு கொடிய வடிவுடையவன் கவந்தன். பரப்பியுள்ள நீண்ட
கரங்களைக் கூட்டி இவற்றிடை அகப்படும் அனைத்தையும் வாய்
கொண்ட வயிற்றில் செறித்து வாழ்ந்தவன்; அவன் வடிவு மாறிச் சாபம்
தீர்ந்த வரலாறு இப்படலத்துள் சொல்லப்படுகிறது.

     அயோமுகியை நீங்கி வந்த இராமலக்குவர்கள் கவந்தன்
கரவீச்சினிடையே சிக்குவதையும், முதலில் இன்னதெனத் தெளிவுறாமல்
கலங்கிய இருவரும் ஒருவாறு முடிவு செய்து கவந்தனின் கரங்களைத்
துணிக்கின்றனர். வெட்டுண்ட கவந்தனின் கொடிய வடிவம் நீங்குகிறது.
ஒளிர் மேனியனாய் மாறிய கவந்தன் தன் மீது சுமந்த சாபம்
நீங்கியதைத் தெரிவித்ததுடன், மேற் சென்று சவரி வாயிலாகச்
சுக்கிரீவன் வாழும் இரலைமலை வழியை அறிந்து செல்லவும்
சுக்கிரீவன் உதவியை நாடவும் அறிவுரை சொல்லி மறைகிறான்.

     தெய்வ உருப்பெற்ற கவந்தன் இராமபிரானைப் போற்றிப்
பாடுவதாக இப்படலத்துள் வரும் பாடல்கள் பக்தி இலக்கியத்துக்குக்
கவிச் சக்கரவர்த்தியின் காணிக்கை என்பது மிகையன்று.

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கவந்தன் வனத்தைக் காணுதல்

3643. ஐ-ஐந்து அடுத்த யோசனையின்
     இரட்டி, அடவி புடையுடுத்த
வையம் திரிந்தார்; கதிரவனும் வானின்
     நாப்பண் வந்துற்றான்;
எய்யும் சிலைக் கை இருவரும் சென்று,
     இருந்தே நீட்டி எவ் உயிரும்
கையின் வளைத்து வயிற்றின் அடக்கும்
     கவந்தன் வனத்தைக் கண்ணுற்றார்.

    ஐ-ஐந்து அடுத்த யோசனையின் இரட்டி - இருபத்தைந்து
என்ற எண்ணிக்கை எட்டிய யோசனை தூரத்தின் இரு மடங்கு
(அதாவது ஐம்பது; அடவி படை உடுத்த வையம் திரிந்தார் -
காடுகளால் பக்கங்களில் சூழப்பட்ட நிலப் பகுதியில் இராம
இலக்குவர்கள் அலைந்தார்கள்; கதிரவனும் வானின் நாப்பண்
வந்துற்றான் -
சூரியன் (வானின்) நடுப் பகுதியை வந்து