என்பது வற்புறுத்தப்பட்டது. சாதலும் பிறத்தலும் வினைப் பயனால் நிகழும் என்பதைச் சிந்தாமணியும் உணர்த்தும், 'சாதலும் பிறத்தல்தானும் தன்விைபை் பயத்தினாகும்'' (சீவக. 269). 'வினைப் போகமே யொரு தேகம் கண்டாய். வினைதான் ஒழிந்தால், தினைப்போதளவும் நில்லாது கண்டாய்' (பட்டினத்-பொது.7). அருள் தருந் திறத்து அறனன்றி வலியது உண்டாமோ'' (2962), ''அறத்தினூஉங்கு ஆக்கமுமில்லை அதனை, மறத்தலினூங்கு இல்லை கேடு'' (குறள்-32) என்பன ஒப்புநோக்கத்தக்கன. 15 4130. | 'ஆக்கமும், கேடும், தாம் செய் அறத்தொடு பாவம் ஆய போக்கி, வேறு உண்மை தேறார், பொரு அரும் புலமை நூலோர்; தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில், தக்கோய்! பாக்கியம் அன்றி, என்றும், பாவத்தைப் பற்றலாமோ? |
ஆக்கமும் கேடும் - செல்வமும் அதன் அழிவும்;தாம் செய் - அவ்வவ் உயிர்கள் செய்யும்;அறத்தோடு பாவம் ஆய -புண்ணிய, பாவங்களால் அமைவன. போக்கி -அக்காரணங்களை விடுத்து;வேறு உண்மை-பிறிதொரு காரணம் இருப்பதை;பொரு அரும் புலமை நூலோர்- ஒப்பற்ற அரிய புலமையுடைய அறிஞர்கள்;தேறார் -தெளிய மாட்டார்கள். தக்கோய் -(ஆகவே) தகுதி வாய்ந்தவனே! ஒன்றோடு ஒன்று தாக்கின - (அவ் அறமும் பாவமும்) ஒன்றோடொன்று மோதி;தருக்குறும் செருவில் - செருக்கடைவதற்கான போரில்;பாக்கியம் அன்றி -நன்மைக்குக் காரணமான நல்வினையைச் செய்வதன்றி;பாவத்தை என்றும் பற்றலாமோ -தீமையைத் தரும் தீய காரியத்தை மேற்கொள்ளலாமோ? ஆக்கத்திற்குக் காரணம் அறம். அதன் அழிவிற்குக் காரணம் பாவம். ஆகவே கடைப்பிடிப்பதற்குரிய அறம், விடுதற்குரியது பாவம் எனக் கூறப்பட்டது. 'ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தோடு பாவம் ஆய' - என்பதில் நேர்நிரல் நிறையணி அமைந்துள்ளது. அறத்திறனாலே எய்தினை அன்றோ? அது நீயும், புறத்தினாலே பின்னும் இழக்கப் புகுவாயோ' (3246); 'ஏவல் எவ்உலகும் செல்வம் எய்தினார் இசையின், ஏழாய்' பாவமோ? முன் செய்த தருமமோ? தெரியப் பாராய் (5198), 'சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு' (குறள் - 31) என்பன காண்க. வாலி சுக்கிரீவன் போரில் இராமன் வாலியுடன் சேராமல் சுக்கிரீவனோடு சேர்ந்ததைப் பாடலின் இறுதி அடியொடு ஒப்பிட்டுக்காண்க. 16 4131. | ''இன்னது தகைமை'' என்ப, இயல்புளி மரபின் எண்ணி, மன் அரசு இயற்றி, என் கண் மருவுழி மாரிக் காலம் |
|