பக்கம் எண் :

60கிட்கிந்தா காண்டம்

நேரம் இங்கே இருங்கள்;என்று விடைபெற்று-என்று கூறி, அவர்கள் பால்
விடை பெற்றுக்கொண்டு;விரைவில் போனான் - விரைந்து சென்றான்.

     ஆண்களில் சிறந்தோனை ஆண்சிங்கம் என்பது போலக்குரங்கினத்தில்
சிறந்தோனாகிய அனுமனைக் 'குரக்குச் சீயம்' என்றார். சீயம் - சிங்கம்.
சீயம்- ஸிம்ஹம் என்னும் வடசொல்லின் திரிபு. தோற்றத்தால் குரங்காக
இருப்பினும்நோக்கத்தில் சிங்கம் போல்வானாதலின் குரக்குச் சீயமானான்
எனலாம்.முன்னும் பின்னும் நோக்கும் சிங்கம் போல அனுமனும்
இராமலக்குவரின்வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையும், நடைபெற
உள்ளனவற்றையும் நோக்கி,அவர்களால் தமக்கு வரும் நன்மைகளை
ஆராய்ந்து சுக்கிரீவனை நட்புக்கொள்ளச் செய்த திறம் புலனாகிறது. 
'வென்றியிர்!' என அவன் விளித்தலில்வாலியை வெல்லும் திறமும்
அடங்கியுள்ளது.  நட்பாக்கிக் கொள்ளும்ஆர்வத்தை 'விரைவில் போனான்'
என்ற தொடர் உணர்த்துகிறது.                                    35