பக்கம் எண் :

நட்புக் கோட் படலம்61

3. நட்புக் கோட் படலம்
 

     இராமனும் சுக்கிரீவனும் நட்புகொண்ட நிகழ்ச்சியைக் கூறும்
பகுதியாதலின் 'நட்புக்கோட்படலம்' எனப்பெயர் பெறுகின்றது.

     அனுமன் சுக்கிரீவனிடம் சென்று இராமன் சிறப்புகளைக்கூறி இராமனிடம்
அழைத்துவந்தான். இராமன் சுக்கிரீவனை வரவேற்று உபசரித்துத் தாங்கள்
வந்த காரியத்தை உரைத்தான்.  சுக்கிரீவனின் பெருமைகளை அனுமன்
உரைத்து, வாலி சுக்கிரீவனிடம் பகைமை கொண்ட காரணத்தையும்
அறிவித்தான்.  வாலிக்கு அஞ்சி, சுக்கிரீவன் வாழ்வதை அறிந்த இராமன்
வாலியைக் கொன்று வானரத்தலைமையினையும் பெற்றுத்தருவதாக உறுதி
கூறினான்.  பின்னர்ச் சுக்கிரீவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசனை
நடத்தினான்.  மராமரங்கள்  எழனுள் ஒன்றை அம்புகொண்டு துளைக்கச்
செய்து இராமன் திறமையை அறியலாம் என அனுமன் கூறச் சுக்கிரீவன்
அதனை ஏற்று இராமனிடம்  சென்று, தான் சொல்வது ஒன்று உண்டு
எனக்கூற, இராமனும் அதைச்சொல்லுமாறு பணித்தான்.

அனுமன், சுக்கிரீவனிடம் இராமன் சிறப்புகளைக் கூறுதல்

கலிவிருத்தம்

3786.போன, மந்தர மணிப் புய
    நேடும் புகழினான், -
ஆன தன் பொரு சினத்து
    அரசன் மாடு அணுகினான் -
'யானும், என் குலமும, இவ்
    உலகும், உய்ந்தனம்' எனா,
மானவன் குணம் எலாம்
    நினையும் மா மதியினான்.

     போன -(அவ்வாறு) சென்ற; மந்தர மணிப்புயம் -மந்தர மலை
போன்ற அழகிய தோள்களால விளைந்த;நெடும்புகழினான் -மிக்க
புகழையும் உடைய அனுமன்;மானவன் குணம் எலாம் -மனுக்குலத்துப்
பிறந்த இராமனுடைய குணங்கள் எல்லாவற்றையும்;நினையும் மாமதியினான்
-
(எப்போதும்) சிந்திக்கும் பேரறிவு உடையவனாய்;யானும், என் குலமும் -
'நானும், எனது குலத்தினரும்;இவ்வுலகும் உய்ந்தனம் -இந்த உலகும்
பிழைத்தோம்';எனா -என்று சொல்லிக் கொண்டே;தன் ஆன -தன்
தலைவனாகிய;பொருசினத்து அரசன்