பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து1

சுந்தர காண்டம்

கடவுள் வாழ்த்து

அறுசீர் விருத்தம்

4740. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
     அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின்
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,
     மறைகளுக்கு இறுதி யாவார்!

     மறைகளுக்குஇறுதியாவார்- வேதத்தின் எல்லை நிலமாக இருக்கின்ற
ஞானிகள்; எவரைக் கண்டால் - எவரைத் தரிசித்த உடனே; விலங்கிய பூதம் ஐந்தும் - ஒன்றோடொன்று ஊடுருவிக் கலந்த ஐந்து பூதங்களும்;
வேறுபாடுஉற்ற வீக்கம் - வேறு வேறு விதமாக அமைந்த பன்மைத்
தோற்றம்;அலங்கலில் தோன்றும் பொய்ம்மை - மாலையில் தோற்றமளித்த
பொய்;அரவு என - பாம்பு போல; கலங்குவது - இல்லாது போதல்
(நிகழுமோ):அவர் அன்றே - அவர் அல்லவா; கைவில் ஏந்தி - கரத்திலே
கோதண்டத்தைத் தாங்கி; இலங்கையில் பொருதார் - இலங்கை மாநகரத்தில்
போர் செய்தவர்; என்பர் - என்று கூறுவர்.

     பொய்யான பாம்பு மெய்யான மாலையைக் கண்டு உண்மை
தெரிந்தவுடன் மறையும். அதுபோலப் பொய்யான பிரபஞ்சம் மெய்யான
பரம்பொருளைப் பார்த்ததும் மறையும். மெய்யுணர்ச்சி தோன்றியதும் பிரபஞ்சம்
இறைவனாகவோ இறைவனின் மேனியாகவோ தோன்றும். உள்ளது - மாலை;
உள்ளது - பரம்பொருள்; இல்லது - பாம்பு; இல்லது - பிரபஞ்சம். பிரபஞ்சத்
தோற்றத்துக்கு ஆதாரமான பரம்பொருள் வில்லேந்தி வந்தது.

     ஐந்து பூதங்களும்தம்மிற் கலத்தலால் விகாரங்கள் உண்டாயின.
கலத்தல்இது பஞ்சீகரணம் என்று பேசப்படும். ஈண்டுப் பூதம் என்றது