பக்கம் எண் :

உருக் காட்டு படலம்367

5277.

‘ “கடற் படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்குஉவமை” என்று உரைக்கும்
                          வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ- உரகப் பள்ளியான்
இடத்து உறைசங்கம் ஒன்று இருக்க, எங்களால் ?

     உரகப்பள்ளியான் - பாம்புப் படுக்கையில்உள்ள திருமாலின்; இடத்
துஉறை -
இடக்கரத்தில் இருக்கும்; சங்கம் ஒன்று இருக்க -
பாஞ்சசன்யம்ஏற்புடையதாக இருக்க; (அதை விட்டுவிட்டு) கடல்படு
பணிலமும் -
கடலில்தோன்றிய சங்கும்; கன்னிப் பூகமும் - இளமையான
கமுகமரமும்;மிடற்றினுக்கு உவமை என்று - கழுத்துக்கு உவமை என்று;
உரைக்கும்வெள்ளியோர்க்கு -
கூறும் அறிவற்றவர்களுக்கு; எங்களால் -
அறிவுடையஎங்களால்; உடன்பட ஒண்ணுமோ - உடன்பட்டுப் பேச
முடியுமா.

         பணிலம் - சங்கு. பூகம்- பாக்குமரம். வெள்ளியோர் - அறிவற்றவர்.
உரகப்பள்ளி - பாம்புப் படுக்கை. உரகமெல் அணையான் கையில் உறைசங்கம்
(பெரியாழ்வார் 4-4-4) இராமபிரான் மிடற்றுக்குத் திருமால் ஏந்திய சங்கமே
உவமை. பிற உவமையாகா.                                 (50)

5278.

‘அண்ணல்தன் திரு முகம் கமலம் ஆம் எனின்,
கண்ணினுக்கு உவமைவேறு யாது காட்டுகேன் ?
தண் மதி ஆம் எனஉரைக்கத் தக்கதோ,
வெண் மதிபொலிந்தது மெலிந்து தேயுமால் ?

     அண்ணல்தன்திருமுகம் - இராமபிரானின்திருமுகமானது; கமலம்
ஆம் எனின் -
தாமரையை ஒக்கும் என்றால்; கண்ணினுக்கு -
அப்பெருமானின் கண்களுக்கு; உவமை - ஒப்புமையாக; வேறுயாது
காட்டுகேன் -
வேறு எதை எடுத்துக் கூறுவேன் (அன்றி); வெண்மதி -
வானத்தில் உள்ள சந்திரன்; பொலிந்தது - பொலிவுடன் இருந்தது (எனினும்
அது); மெலிந்து தேயும் - ஒளி குன்றி அழியும் (ஆதலினால்);  (திருமுகம்)
தண்மதி ஆம் என - குளிர்ந்த சந்திரன் போலும் என்று; உரைக்கத்
தக்கதோ -
கூறுதல் தகுதியுடையதா.

     உரைத்தல்என்னும் தொழிற்பெயர் உரைக்க என்னும் எச்சம் போல்
உள்ளது. பேசல் கூடாது என்பது பேசக்கூடாது என்று வருதலை நோக்கி
அறிக. தொழிற் பெயர் எச்சம்போல் துலங்கலும் உளவே. (உரைச்சூத்திரம்)
தண்மதி, சுட்டளவாக நின்றது. இனியர் புகழான்