பக்கம் எண் :

416சுந்தர காண்டம்

- ; இடபன் - ;குமுதாக்கன் - ; பனசன் - ; சரபன் - ; நெடுஞ்சாம்பன்
-
நீண்ட ஆயுளையுடைய சாம்பன்; காலன் அனைய - யமனைப் போலும்;
துன்மருடன் - ; காம்பன் - ; கவயன் - ; கவயாக்கன் - ; ஞாலம்
அறியும் நளன் -
உலகத்தாரால் அறியப்பட்ட நளன்; சங்கன் - ; விந்தன்
-; துமிந்தன் - ; மதன் என்பான் -
மதன் என்று கூறப்படுபவன்.

    வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்... மதன் இப்பாடலும் அடுத்த பாடலும்
ஒரு தொடர். மயிந்தன் துமிந்தன் இரட்டையர். குமுதன் ஆம்பல் மலர்
போலும் நிறமுடையவன். இடபன் - காளை போல்பவன். குமுதாக்கன் -
ஆம்பல் போலும் கண்களைப் பெற்றவன். சரபன் - சரபப் பறவை
போன்றவன். நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகையால் நெடுஞ்சாம்பன் என்று
பேசப்பட்டான். துன் மருடன் - பொறுக்கவொண்ணாச் சீற்றத்தான் கவயன் -
காட்டுப் பசுப் போல்பவன். கவயாட்சன் - காட்டுப் பசுவின் கண் பெற்றவன்.
சங்கன் - சங்கு போலும்நிறமுடையவன்.                      (116)

5344.

‘தம்பன்,தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன்,
                            சதவலி என்று
இம்பர் உலகோடுஎவ் உலகும் எடுக்கும் மிடுக்கர்,
                            இராமன் கை
அம்பின் உதவும்படைத் தலைவர்; அவரை நோக்கின்,
                            இவ் அரக்கர்,
வம்பின்முலையாய் ! உறை இடவும் போதார்;
                    கணக்கு வரம்பு உண்டோ ?

     வம்பின்முலையாய் - கச்சணிந்த தனங்களைஉடைய அம்மையே;
தம்பன் - ; தூமத் தனிப் பெயரோன் -
தூமன் என்ற ஒப்பற்ற பெயரை
உடையவன்; ததியின் வதனன் - ததிமுகன்; சதவலி - ; என்று - என்று;
இம்பர் உலகோடு - இந்த உலகத்தையும்; எவ்வுலகும் - எந்த உலகத்
தையும்;எடுக்கும் மிடுக்கர் - சுமக்கின்ற ஆற்றலுடையவர்; (அவர்கள்)
இராமன் -இராமபிரானின்; கை அம்பின் - கையிலுள்ள அம்பைப் போல;
உதவும் -
(ஏவியதைச் செய்ய) உதவுகின்ற; படைத்தலைவர் -
சேனைத்தலைவர்கள்; கணக்கு வரம்பு உண்டோ - அவர்களின்
எண்ணிக்கைக்கு எல்லை உள்ளதா? அவரை நோக்கின் - அப்படைத்
தலைவர்களைப் பார்க்கும்போது; இவ்அரக்கர் - இந்த அரக்கர்கள்;
உறையிடவும் போதார் -
உறையாகவைப்பதற்கும் போதமாட்டார்கள்.