பக்கம் எண் :

418சுந்தர காண்டம்

5. சூடாமணிப்படலம்

 

     அனுமன்பிராட்டியின் நிலையைத் தெரிந்த கொண்ட பிறகு
எப்படியாவது பிராட்டியைச் சிறையிலிருந்து விடுவிக்க எண்ணுகிறான். அவன்
‘தாயே ! தாங்கள் என் தோளில் அமர்ந்து கொள்ளுங்கள். தங்களை யான்
இராமன் பால் சேர்ப்பிப்பேன்’ என்று விண்ணப்பித்தான்.

     அதுகேட்டபிராட்டி அது பொருத்தமற்ற செயல் என்று விளக்கி
உடன்படாது மறுக்கிறாள். பிராட்டியின் வார்த்தைகளைக் கேட்டு உணர்ந்த
அனுமன் தன் கருத்தை விலக்கிக் கொண்டு, ‘இராமபிரானுக்கு யான் கூற
வேண்டிய செய்தி யாது ? கூறுக’ என்று கேட்கிறான்.

     அனுமன் மொழிகேட்ட பிராட்டி ‘நான் இன்னும் ஒரு மாதம் உயிரோடு
இருப்பேன்’ என்று நாயகன் பால் கூறுக’ என்று கூறி அவல நிலையில்
பலபடியாகப் பேசினாள். பின்னர் அனுமன் தெளிவிக்க அறிய பிராட்டி
‘அண்ணல் பால் நினைவுறுத்துக’ என்று அடையாள மொழிகளைக் கூறினாள்.

     பிறகு தன்ஆடையில் முடித்து வைத்திருந்த சூடாமணியை அனுமனிடம்
வழங்குகிறாள். சூடாமணியைப் பெற்ற அனுமன் பிராட்டியை மும்முறை
வணங்கித் திரும்பிச் சென்றான்.

     இப்படலம்சம்சார மண்டலத்தில் உழலும் ஆன்மாவைக் குரவர்பிரான்
தேற்றி, நல்லுரை பகர்ந்து, பக்தியை வளர்த்து நம்பிக்கை ஊட்டுவதைக்
குறிக்கிறது.

     இராமகாதையிலேயே இப்படலம் தெய்வத்தன்மையோடு கூடியது என்று
பகர்வர். இப்படலம் நாள், கோள்களால் வரும் இடையூறுகளைப் போக்கும்
மந்திரசக்தி வாய்ந்தது.

                                           அனுமன் விண்ணப்பம்

சந்தக் கலிவிருத்தம்

5345.

‘உண்டு துணைஎன்ன எளிதோ உலகின் ? அம்மா !
புண்டரிகைபோலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்ட முதல்நாயகனது ஆவி அனையாளைக்
கொண்டு அகல்வதேகருமம்’ என்று
                          உணர்வுகொண்டான்.