பக்கம் எண் :

கடல் தாவு படலம்5

1. கடல் தாவு படலம்

அனுமன் மகேந்திரமலையிலிருந்து தென்பெருங்கடலைக் கடந்து
பவளமால் வரையில் பாய்ந்த செய்தியைக் கூறுகிறது. இப்படலத்தில்
மைந்நாகன், சுரசை, அங்காரதாரை என்னும் மூன்று பாத்திரங்களை அனுமன்
சந்திக்கின்றான். பேருருக் கொண்டு அனுமன் கடல் கடந்து செல்லும்போது
அவனுக்கு உதவி செய்வதற்காக மைந்நாகமலை கடலிலே தோன்றி,
அனுமனைத் தன்மீது தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டுகிறது. அனுமன்,
‘இராமன் திருத்தொண்டு செய்யும் நான் ஓய்வை விரும்பேன். திரும்பி
வரும்பொழுது உன்னைக் காண்கிறேன்’ என்று சொல்லிக் கடந்து செல்கிறான்.
கடந்து செல்கிற அனுமனைத் தேவர்கள் ஏவலால் சுரசை தடுக்கிறாள். அவள்
‘எனக்குப் பசியாக இருக்கிறது. உன்னை உண்பேன்’ என்று வாயைத்
திறக்கிறாள். அனுமன் அவள் வாய்க்குள் புகுந்து வெளியே வருகிறான்.
சுரசையை வென்ற அனுமன் அங்கார தாரையைச் சந்திக்கின்றான். அங்கார
தாரை அனுமனை விழுங்குகின்றாள். அனுமன் அவள் உடலைப் பிளந்து
வெளிப்படுகிறான். அரக்கி இறக்கிறாள். தேவர்கள் அனுமனை
வாழ்த்துகின்றனர். அனுமன், வருகின்ற இடையூறுகள் எல்லாம் நீங்க
வேண்டும் என்று கருதி, இராம நாமத்தைத் தியானிக்கின்றான். மூன்று
தடையைக் கடந்த அனுமன் பவளமால் வரையில் பாய்ந்து இலங்கையின்
வளங்களை நோக்குகிறான்.

பத்துவிதமானபொறி புலன்களின் வயப்பட்ட ஆன்மாவின்
வீடுபேற்றிற்காக நற்குரவன் சம்சார சாகரத்தைக் கடந்து புனித ஆன்மாவை
நோக்கி வருவது இப் படலத்தின் உட்குறிப்பு என்பர். இங்கு அனுமன்
நற்குரவன், பிராட்டி புனித ஆன்மா என்று கொள்வர்.

                     அனுமன்துறக்க நாட்டை இலங்கை என்று ஐயுற்றுத் தெளிதல்

                            அறுசீர்விருத்தம்

4741.

ஆண்தகைஆண்டுஅவ் வானோர்
துறக்க நாடுஅருகில் கண்டான்;
‘ஈண்டு,இதுதான்கொல் வேலை
இலங்கை?’ என்று ஐயம் எய்தா,
வேண்டு அருவிண்ணாடு என்னும்
ள்ளம் மீட்டான்