பக்கம் எண் :

கடல் தாவு படலம்59

 

‘இங்குஆர்கடத்திர்’ எனை என்னா எழுந்தாள்
     அங்கார தாரைபெரிது ஆலாலம் அன்னாள்.

     பெரிது ஆலாலம்அன்னாள் -பெரிய ஆலகால விடத்தைப் போன்ற;அங்கார தாரை - அங்கார தாரை என்பவள்; அப்பொங்கு புனல் ஆர்கலி- அந்த பொங்குகின்ற புனலைப் பெற்றுள்ள கடல்; வேறேயும் ஒன்று -தன்னினும் வேறுபட்ட ஒரு; வெங்கார் நிறப் புணரி - வெப்பமான கரிய நிறம்பெற்ற கடலை; தர - பெற்றெடுத்து; பொலிவதே போல் -
விளங்குவதையேஒப்ப (தோன்றி); எனை - என்னை; இங்கு ஆர் கடத்திர்
-
இங்கேதாண்டிப் போகின்றீர்; என்னா - என்று கூறி; எழுந்தாள் -
வளர்ந்தாள்.

     கடல் மற்றொருகடலை ஈன்றதுபோல் அங்கார தாரை கடலில்
தோன்றினாள். அவள் என்னை எவர் கடக்கப் போவது என்று கூறினாள்.
அங்கார தாரை - நெருப்புக் கொழுந்து போன்றவள். ஒன்று புணரியை -
எனக்கூட்டி யுரைக்கப் பெற்றது.                              (75)

4816.

காதக்கடுங்குறி கணத்து இறுதி கண்ணாள்
     பாதச்சிலம்பின்ஒலி வேலைஒலி பம்ப,
வேதக்கொழுஞ்சுடரை நாடிநெடு மேல்நாள்
     ஓதத்தின்ஓடும்மது கைடவரை ஒத்தாள்.
 

     கணத்து இறுதி -ஒருகணத்தின் முடிவுக்குள்; காதம் - காத
தூரத்திலுள்ள பொருளை; கடுங்குறி கண்ணாள் - வேகமாக அறியும்
கண்களையுடைய அங்கார தாரை; பாதச் சிலம்பின் ஒலி - பாதத்தின்
சிலம்பின் ஒலியாலே; வேலையொலி பம்ப - கடல் அலையின் ஒலி அடங்க;
நெடுமேல் நாள் -
நீண்ட காலத்துக்கு முன்; வேதக் கொழுஞ்சுடரை -
வேதங்கள் உணர்த்தும் ஒளிமயமான திருமாலை; நாடி - போர்செய்ய விரும்பி;
ஓதத்தின் ஓடும் - கடலிலே ஓடி வருகின்ற; மது கைடவரை - மதுவையும்
கைடவனையும்; ஒத்தாள் - ஒத்திருந்தாள்.

     அங்காரதாரை -நீண்ட தூரத்தில் உள்ள பொருள்களைக் காணும்
கண்களைப் பெற்றவள். அவள் திருமாலுடன் போர் செய்ய வந்த மது
கைடவர்களைப் போன்றிருந்தாள். கடும்குறி - வேகமாக அறியும். கலுழன்தன்
கடுமையிற் கரந்தான் (6237) (வேலை - அலை பம்பு - அடங்கி)      (76)