பக்கம் எண் :

618சுந்தர காண்டம்

10. அக்ககுமாரன்
வதைப்படலம்

     இராவணனது இளைய மகனானஅக்கன் என்பவன், அனுமனோடு போர்
செய்து மடிந்ததைப் பற்றிக் கூறுவது இந்தப் படல்ம்.

அக்ககுமாரன்அனுமனுடன் போருக்கு எழ
இராவணனிடம் விடைபெறுதல் 

5668.

கேட்டலும்,வெகுளி வெந் தீக் கிளர்ந்து எழும்
                              உயிர்ப்பனாகி,
தோட்டு அலர்தெரியல் மாலை வண்டொடும்
                             சுறுக்கொண்டு எற,
ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான்
                             ஒருப்பட்டானை,
தாள்-துணைதொழுது, மைந்தன் தடுத்து,
                        ‘இடைதருதி’ என்றான்.

     ஊட்டு அரக்குஉண்ட போலும் நயனத்தான்  - பூசப்பட்ட
அரக்குப்படியப்பெற்றது போன்ற செந்நிறமாய் விளங்கும் கண்களை உடைய
இராவணன்; கேட்டலும் - (பஞ்ச சேனாபதிகளும் சேனைகளும் இறந்தனர்
எனக்) கேட்டவுடன்;
வெகுளி வெந்தீக்கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி -
கோபக் கொடுந்தீ,பொங்கி வருகின்ற பெருமூச்சை உடையவனாகி; தோட்டு
அலர் தெரியல்மாலை -
இதழ்கள் மலரப் பெற்றதும் தேர்ந்து
தொடுக்கப்பட்டதுமானஅவனுடைய மாலை; சுறுக் கொண்டு ஏற - பொசுங்கி
நாற்றம் பரந்து வீச;ஒருப் பட்டானை - போருக்கு ஆயத்தமாய் நின்ற
இராவணனை; மைந்தன் -அவன் மகனாகிய அக்ககுமாரன்; தாள் துணை
தொழுது -
அவனது இரண்டுபாதங்களிலும் வணங்கி; தடுத்து - அவனைப்
போருக்குச் செல்லாமல் தடுத்து;‘இடை தருதி’ என்றான் - (யான் சென்று
போர் புரியுமாறு எனக்கு)‘வாய்ப்புத் தருக’ என்று கேட்டுக் கொண்டான்.