பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்707

12. பிணி வீட்டுபடலம்

    பிரம்மாத்திரத்தால் கட்டுண்ட அனுமன், சிறிது பொழுது தாழ்ந்து,
அக்கட்டினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டதைப் பற்றிக் கூறுவது இந்தப்
படலம்.

கட்டுப்பட்டஅனுமனைக் கண்ட அரக்கர் நிலை

கலி விருத்தம் 

5805.

‘எய்யுமின்; ஈருமின்; எறிமின்; போழுமின்;
கொய்யுமின்குடரினை; கூறு கூறுகள்
செய்யுமின்;மண்ணிடைத் தேய்மின்; தின்னுமின்;
உய்யுமேல்,இல்லை நம் உயிர்’ என்று ஓடுவார்.

     எய்யுமின் -(இந்தக்கொடிய குரங்கை) அம்பு கொண்டு எய்யுங்கள்;
ஈருமின் - வாள் கொண்டு வெட்டுங்கள்; எறிமின் -
ஈட்டியால்குத்துங்கள்;
போழுமின் - கோடாலியால் பிளவுங்கள்; குடரினை கொய்யுமின் - இதன்
குடலைப் பறித்திடுங்கள்; கூறு கூறு செய்யுமின் - இதனைத்துண்டு
துண்டுகளாக செய்யுங்கள்; மண்ணிடைத் தேய்மின் - தரையில் தேய்த்து
அழியுங்கள்; தின்னுமின் - இதன் உடல் தசையைத் தின்னுங்கள்; உய்யுமேல்
நம் உயிர் இல்லை -
இது பிழைத்துப் போகுமானால், நமது உயிர்
இல்லாததாகும்; என்று ஓடுவார் - என்று சொல்லிக் கொண்டு, (அனுமன்
இருக்கும் இடத்துக்கு பல அரக்கர்கள்) ஓடி வந்தார்கள்.

     இது பிழைத்தால்நம்மைக் கொன்று விடும் என்பது பிணிப்புண்ட
அனுமனைக் கண்ட அரக்கர்கள் கருத்து. அரக்கர்கள் தம் கோப எண்ணத்தை
வெளிப்படுத்தியது.                                             (1)

5806.

மைத் தடங்கண்ணியர், மைந்தர், யாவரும்,
பைத் தலை அரவுஎனக் கனன்று, ‘பைதலை
இத்தனைபொழுதுகொண்டு இருப்பதோ ?’ எனா,
மொய்த்தனர்;கொலை செய முயல்கின்றார், சிலர்.