பக்கம் எண் :

ஊர் தேடு படலம்71

2. ஊர் தேடு படலம்

பவளமால் வரையில்தங்கிய அனுமன் இலங்கை வளங்களையெல்லாம்
நோக்கி வியக்கின்றான். அன்று முன்னிருட்டுத் தோன்றுகிறது. பின்பு நிலவு
உதயமாகிறது. நிலாவின் வெளிச்சத்திலே இலங்கையின் தோற்றத்தைக் கண்டு
அனுமன் அதிசயப்படுகிறான்.

அனுமன் இலங்காதேவியைச் சந்திக்கின்றான். இலங்கா தேவி
இந்நகருக்குள் போகாதே; வெளியேசெல் என்கிறாள். அவள் அனுமன்மேல்
மூவிலை வேலை ஏவுகிறாள். அனுமன் அந்த வேலை முறித்து
இலங்காதேவியைக் கரத்தால் தாக்குகிறான். அவள் கீழே வீழ்கிறாள்.

இலங்காதேவி‘அறம் வெல்லும்! பாவம் தோற்கும்! என்று சத்தியம் கூறி
விண்ணுலகிற்குச் செல்கிறாள்.

அனுமன்,கும்பகர்ணன், வீடணன் முதலானவர்களைக் கண்டு
இராவணன் அரண்மனைக்குள் புகுகிறான். அங்கு இராவணன்பால்
காதல்கொண்ட உரிமை மகளிர்களையும் மண்டோதரியையும் காண்கிறான்.

இறுதியில் அனுமன்இராவணனைக் கண்டு சீற்றம் கொள்கிறான். தாக்க
நினைக்கிறான். பிறகு எண்ணாது செய்வது பிழை என்று தன் சீற்றத்தை
அடக்கிக் கொள்கிறான்.

இராவணன்அரண்மனையைக் கடந்து வெளிப் போந்த அனுமன்,
பலவாறு கூறிப் புலம்புகிறான். இறுதியில் அசோகவனத்தைக் காண்கிறான்.

இப் படலம் புனிதஆன்மாக்களைச் சம்சார மண்டலத்தில் குரவர்
பிரான்தேடுவதைக் குறிக்கும். உலகில் பெரும்பான்மையானவர்கள்
பொறிபுலன்களின்வயப்பட்டவர்கள் என்பதை இலங்கையிலுள்ள அரக்கர்களும்,
அரக்கியர்களும்,உரிமை மகளிர்களும் வெளிப்படையாகவும், குறிப்பாகவும்
தெரிவிக்கின்றனர்.

இலங்கைமாநகர வருணனை

                                   கலிவிருத்தம்

4835.

பொன்கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த?
மின்கொண்டுஅமைத்த ? வெயிலைக்கொடு சமைத்த?