பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்823

14. திருவடி தொழுதபடலம்

     அனுமன், இராமபிரானதுதிருவடியைத் தொழுது, பிராட்டியைத் தான்
கண்டு வந்த செய்தியைக் கூறுவது, ‘திருவடியை நாரணனைக் கேசவனைப்
பாஞ்சுடரை’ என்ற திருவாய் மொழித் (4.9.11) தொடரை அடிப்படையாக்கிக்
கொண்டு பார்த்தால், திருவடி என்ற தொடர் இராமபிரானையே குறிப்பதாகவும்
கொள்ளலாம்.

     மேலும் ‘திருவடி’ என்பது அனுமனைக் குறிப்பதாகக் கொண்டு,
இராமபிரான் என்ற செயப்படு பொருளை வரவழைத்தும் பொருள்
கொள்ளலாம். திருவடி (அனுமன்) யாரைத் தொழுதான் ? இராமபிரானையா ?
அன்று.

     இப்படலத்தின்22ஆம் கவிதை, இதனைத் தெளிவாக்குகிறது.

 

எய்தினன்அனுமனும் எய்தி, ஏந்தல் தன்
மொய் கழல்தொழுகிலன்

     இராமபிரானது திருவடியைஅனுமன் தொழவில்லை என்பதை
இக்கவிதையி்ன் முன் பகுதி மூலம் நன்கு உணரலாம். அப்படியானால், யாரைத்
தொழுதான் ?

 

முளரிநீங்கிய
தையலைநோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான்

     ‘பிராட்டியைத் தான்அனுமன் தொழுதான்’ என்பதை இதன் மூலம்
உணரலாம்.

     ஆக, திருவடியாகியஅனுமன், பிராட்டியை, இருந்த இடத்திலிருந்தே
தொழுது, தான் கண்டுவந்த செய்தியை இராமபிரானிடம் சொல்வதைத்
தெரிவிப்பது இந்தப் படலம் என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

வான்வழி மீளும் அனுமன், மயேந்திரத்தில் குதித்தல் 

அறுசீர் ஆசிரியவிருத்தம் 

6007.

‘நீங்குவென் விரைவின்’ என்னும் நினைவினன்,
                            மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமிக்குன்றை அருக்கனின்
                           அணைந்த ஐயன்,