பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 191

பொருந்திய பெருமையுடன் முடிசூட்டும் உரிமைப் பணிகளைப்
புரிவீராக; என்றான்.
 

முன்றில்; அரண்மனை முற்றம். ஒன்றுதல் - பொருந்துதல்.
 

(174)
 

பிரகலாதன் முடிசூடி மூவுலகும் ஆளுதல்
 

6363.

'தே மன், உரிமை புரிய திசை முகத்தோன்

ஓமம் இயற்ற, உடையான் முடி சூட்ட,

கோ மன்னவன் ஆகி, மூஉலகும்

கைக்கொண்டான்-

நாம மறை ஓதாது ஓதி, நனி உணர்ந்தான்.
 

நாம மறை- புகழ் மிகுந்த நான்கு வேதங்களையும்; ஓதாது
ஓதி
- முறையாக ஆசிரியனை அடைந்து பயிலாது, இறையருளால்
தானே   பயின்று;   நனி   உணர்ந்தான்  -   மிக   நன்றாக
உணர்ந்தவனான   பிரகலாதன்;   தேமன்   உரிமை   புரிய-
தேவர்களுக்கு மன்னனான இந்திரன் முடி சூட்டு  விழாவுக்குரிய
பணிகளைப் புரிய; திசைமுகத் தோன்-  நான்கு   திசைக்கும்
உரிய நான்கு  முகங்களை  உடையபிரமன்;   ஓமம்   இயற்ற-
விழாவுக்கான  வேள்வியைச்  செய்ய;   உடையான்   முடிசூட்ட
- எல்லா   உலகங்களையும்    உடையவனாகிய   சிங்கப்பிரான்
(திருமால்) தனது திருக்கரத்தால் மணிமுடிசூட்ட; கோமன்னவன்
ஆகி  மூவுலகும்
  கைக்   கொண்டான்-  சக்கரவர்த்தியாகி
மூன்றுலகங்களும் தனக்கே உரியதாகக் கைக் கொண்டு  ஆட்சி
செய்தான்.
 

வேதங்கள் புகழ் மிகுந்தவை யாதலின் 'நாமமறை' என்றார்.
நாமம் - புகழ். இறையருளால் தானே  ஓதி  நன்குணர்ந்தவன்
என்பதை 'ஓதாது ஓதி நனிஉணர்ந்தான்'  என்றார்.  தே மன் -
தேவர்தலைவன். உலகம் முழுதுடையான்  உவந்து  முடிசூட்ட
மூவுலகுக்கும்   உரிமையுடையவனாய்    ஆட்சி   செய்தான்
என்பதால்  கோமன்னவனாகி  மூவுலகும்  கைக்  கொண்டான்
என்றார். கோமன்னவன் - அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி)
 

(175)
 

வீடணன் முடிவுரை
 

6364.

'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம்பெருமான் ! என்

மாற்றம்

யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல்,