பக்கம் எண் :

192யுத்த காண்டம் 

     

தீது ஆய் விளைதல் நனி திண்ணம்' எனச்

செப்பினான்-

மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான்.
 

மேதாவிகட்கு    எல்லாம் -   அறிஞர்களுக்கெல்லாம்;
மேலானமேன்மையான- மேம்பட்ட மேலோனாகிய வீடணன்;
ஈது ஆகும்
முன் நிகழ்ந்தது - முன்பு  நிகழ்ந்த  இரணியன்
கதை இதுவாகும்;  எம்பெருமான்-  எமது தலைவனே !; என்
மாற்றம் யாதானும்
- என்னுடைய பேச்சு  எதுவாயினும்; ஆக
நினையாது  இகழ்தியேல்
- உனது  நன்மைக்காவது  என்று
நினைக்காமல்  இகழ்வாயானால்; தீதாய்  விளைதல் -  தீமை
உண்டாவது;  நனி திண்ணம் - மிகவும்  உறுதியாகும்;  எனச்
செப்பினான்
- என்று கூறினான்.
  

"நான் சொல்லும் உரை எதுவாயிருந்தாலும் உனக்கு நன்மை
தருவதாகும்  என்று  நினைக்காமல்   இகழ்ந்து   ஒதுக்குவாய்
என்றால் தீமையாகவே  முடியும்" என்பான்  "தீதாய்  விளைதல்
நனி திண்ணம்" என்றான்.
 

(176)