பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 193

4. வீடணன் அடைக்கலப்

படலம்
 

வீடணன் இராமபிரானை அடைக்கலம் அடைந்த செய்தியைக்
கூறும் பகுதியாதலால் இப் பெயர் பெற்றது. இரணியன்  கதையைக்
கூறி,  இராவணனைத்  திருத்த  முயன்ற  வீடணனை  இராவணன்
சினந்து  'என்   எதிரில்   நில்லாதே'  என   வெறுத்துரைத்தான்,
வீடணன் இலங்கையை விட்டு வெளியேறினான். தன் அமைச்சர்கள்
நால்வரும் கூறிய அறிவுரைப்படி இராமனைச்  சரண்  அடைந்தான்.
இராமபிரான் வீடணனை ஏற்றுக்  கொள்வதற்கு  முன்  சுக்கிரீவன்
முதலான வானரவீரர்களின் கருத்துகளைக் கேட்டு, பின்  அனுமன்
கூறிய கருத்தைக் கேட்டு 'பேரறிவாள  நன்று'  என  அனுமனைப்
பாராட்டி,    சுக்கிரீவனையே   வீடணணை    அழைத்து    வர
அனுப்புகிறான்.  இராமனைச்  சரணடைந்த  வீடணனை  இலங்கை
வேந்தனாக முடிசூட்டி இராமன் ஏற்றுக் கொள்கிறான். "இளையவற்
கவித்த  மோலி  என்னையும்  கவித்தி'   என்று   இராமபிரானது
திருவடிகளை முடியில்  சூடி   மகிழ்கிறான்   வீடணன்   என்பன
இப்படலத்தில் கூறப்படும் செய்திகள்.
 

இராவணன் சினந்து வீடணனைத் துரத்துதல்
 

கலிவிருத்தம்
 
 

6365.

கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்

கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -

மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -

ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.
 

கேட்டனன் இருந்தும்-  வீடணன்  கூறிய  அறிவுரைகளை
எல்லாம்   இராவணன்   கேட்டவனாயிருந்தும்;   அக்கேள்வி
தேர்கலா
- அக்கேள்விப் பொருளைத் தேர்ந்தறியாத; கோட்டிய
சிந்தையான்
-  நேர்மையின்றிச்  சென்ற   மனமுள்ளவனாதலால்;
உறுதி  கொண்டிலன்-   வீடணன்    கூறியவை    தனக்குறுதி
பயப்பதாகக் கொண்டிலன் ஆதலால்; மூட்டிய தீ என  - நன்கு
மூட்டப்பட்டு எரிகின்ற தீயைப் போல;  முடுகிப்  பொங்கினான்
- விரைந்து வெகுண்டான்; ஊட்டு அரக்கு  ஊட்டிய அனைய-
உருகிய அரக்கு