பக்கம் எண் :

52   யுத்த காண்டம்

பாராட்டாமல் விட்டுவிட்டு, இராமன் பேசும் சொற்கள்
வியப்பைத் தருவதாகும். இலக்குவனைப் பாராட்டாதது
மட்டுமில்லை,   அதனெதிராக 'இலக்குவா! இவ்வெற்றி
நின்னால் விளைந்தது அன்று, அனுமன் என்பவனாலும்
அன்று, உண்மையில் இது   வீடணன் தந்த வெற்றியே
ஆகும்' என்ற கருத்துப்பட,
 

'ஆடவர் திலக! நின்னால் அன்று; இகல் அனுமன் என்னும் 

சேடனால் அன்று; வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று; 

வீடணன் தந்த வென்றி, ஈது' என விளம்பி மெய்ம்மை, 

ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன், இனிதின்,

இப்பால்.

(9185)
 

இராமன் இவ்வாறு   கூறக் காரணம் என்ன? மறைவாக
நடைபெற்ற  நிகும்பலை யாகத்தை அறிந்துவந்து சொன்னது
பெரிய    உதவிதான், மறுப்பதற்கில்லை. அந்த உதவிக்காக
"வீடணன் தந்த   வெற்றி   ஈது"  என்று இராமன் கூறுவது
முறையாகுமா?
 

ஆழ்ந்து சிந்தித்தால், இரண்டாவது  முறையாகப் பச்சாதாப
மேலீட்டினால்    இராமன்   இவ்வாறு கூறுகிறான்  என்பதைப்
புரிந்துகொள்ள   முடியும்.   "என்னைக்   கெடுத்தொழிந்தனை"
என்று  அவசரப்பட்டுக்  கூறிவிட்டு,    பிறகு தான் கூறியதற்கு
வருந்தி அதற்கு ஒரு கழுவாய் தேடவேண்டும் என்று நினைத்து,
அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு,  வீடணன்
மனப்புண்ணுக்கு மருந்திடுவது போல, 'வீடணன் தந்த   வெற்றி
ஈது' என்று    இராமன்   கூறினான் என்று நாம்  நினைப்பதில்
தவறில்லை.    முன்னர்,    வாலி    யார்   என்று  முழுவதும்
தெரிந்துகொள்ளாமலே, 'நின்னைச் செற்றவர், என்னைச் செற்றார்
(3812) தலைமையோடு நின்தாரமும்,   உனக்கு  இன்று தருவென்'
(3855) என்று   அவசரப்பட்டு   வாக்களித்துவிட்டு   வாலியின்
உரையாடலால் மனம் வருந்திய  இராகவன்,   அதற்கு கழுவாய்
தேடும் முறையில் "நீ இது  பொறுத்தி"   (4093)   என்று  கூறி,
அங்கதனிடம் வாளைக்   கொடுத்தது   இராமன் பச்சாதாபத்தின்
முதல்  நிகழ்ச்சியாகும்.    இவ்வாறு  கூறுவதால் இராமன் என்ற
பாத்திரத்திற்கு    ஒரு    இழுக்கைக் கற்பித்துவிட்டதாக யாரும்
நினையவேண்டியதில்லை. மனிதன்  என்ற   அடிப்படையில் தான்
இப்பாத்திரத்தைப்