பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 591

13. அங்கதன் தூதுப் படலம்
 

வானர   சேனை,  இலங்கை மாநகரை வளைத்துக் கொண்டு,
இராமன் ஆணைக்குக் காத்து  நிற்கிறது. அறத்தின் மூர்த்தியாகிய
இராமபிரான்   அப்போது   நிகழ  இருக்கும் அழிவுக்கு அஞ்சி,
இராவணனிடம் இன்னும் ஒருமுறை தூதனுப்பி அவன் கருத்தறியத்
துணிகிறான்.    வீடணன்    முதலியோர்  இசைவும், இலக்குவன்
எதிர்ப்பும்  தெரிவிக்கின்றனர்.  தூதுவிடல்  அரச குலத்தின் நீதி
மரபே   என்று   அங்கதனைத்   தூதாக  அனுப்பப் பெருமான்
திருவுள்ளம்   முடிவெடுக்கிறது. மகிழ்ந்த அங்கதன் இலங்கையுட்
புகுந்து,   இராவணன்     ஓலக்கம்     அடைந்து    தன்னை
அறிவிக்கின்றான்    வாலியின்   மகன் என அறிந்த இராவணன்
தன்பால்    அங்கதனை   ஈர்க்க முயன்று தோற்கிறான். அவன்,
தேவியை விடுதற்கு இசையான்; ஆவியை விடுதற்கு ஆயத்தமாகி
விட்டான்  என்று தூதுரைத்து மீண்ட அங்கதன் இராமபிரானுக்கு
அறிவிக்கின்றான்.     இப்படலத்தில்    இராவணன்,  அங்கதன்
உரையாடல் அழகு பட அமைந்துள்ளது.
 

இராமன் தூது விடுத்தல் பற்றி வீடணனிடம் பேசுதல்
 

6974.

வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி, 

வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் கணித்த வெஞ்

சேனையோடும்,

கள்ளனை வரவு நோக்கி, நின்றனன், 

காண்கிலாதான்,

'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு 

உரைப்பதானான்:

 

வள்ளலும் -   வள்ளலாகிய  இராமபிரானும்;வெள்ளம் ஓர்
எழுபத்து
  -   எழுபது    வெள்ளம்      என்று;    கணித்த
வெஞ்சேனையோடும்
  - அளவிடப்பட்டுள்ள   வீரம்    மிக்க
வானரப்படையுடனே;    விரைவின்   எய்தி  -   விரைவாகச்
சென்றடைந்து;கள்ளனை வரவு   நோக்கி- (சீதையைக் களவில்
கவர்ந்த)    திருடனாகிய     இராவணனுடைய    வருகையினை
எதிர்பார்த்து; வடதிசை வாயில்  முற்றி  நின்றனன்- வடக்குத்
திக்கிலுள்ள கோட்டை வாயிலை முற்றுகையிட்டு நின்றான்; (அங்கு)
காண்கிலாதான்
-(இராவணனது வருகையை) காணப் பெறாதவனாய்;
வீடணற்கு
 -