பக்கம் எண் :

 கடல் காண் படலம் 1

யுத்த காண்டம்
 

கம்பராமாயணத்தின் ஆறாவது காண்டம் யுத்த காண்டம்.
இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு
நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக்   கூறும்    பகுதியாதலின்
யுத்த காண்டம் எனப் பெயர் பெற்றது.
 

இராமன் இலங்கைக்குச் செல்வதற்குமுன் தமிழ்நாட்டின்
கடற்பகுதியைக் காண்பது  முதல் இராவண  வதம்  முடிந்து
அயோத்திக்குத் திரும்ப  வந்து முடிசூடியது  வரை  உள்ள
நிகழ்ச்சிகளைக் கூறுவது.
 

கடல்காண்  படலம் முதலாக  விடை கொடுத்த படலம்
ஈறாக 39 படலங்களைக் கொண்டது யுத்த காண்டம்.
 

கடவுள் வாழ்த்து
 

அறுசீர் விருத்தம்
 

6059.'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;

'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;

'அன்றே' என்னின், அன்றே ஆம்;

'ஆமே' என்னின், ஆமே ஆம்;

'இன்றே' என்னின், இன்றே ஆம்;

'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;

நன்றே, நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

 

ஒன்றே என்னின் ஒன்றேயாம்  -   ஒன்று என்று கூறினால்
ஒன்றேயாகும்;பல என்று உரைக்கின் பலவே ஆம் - பல என்று
கூறின் பலவாகும்;அன்றே என்னின் அன்றே ஆம் - இத்தன்மை
உடையதல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும் ;ஆமே என்னின்
ஆமே யாம்
- இன்ன    தன்மை    உடையது  என்று  கூறினால்
அந்தத்தன்மை உடையதாயிருக்கும்;  இன்றே என்னின்   இன்றே
யாம்
- இல்லை என்று சொன்னால்   இல்லாததாகும்;உளது என்று
உரைக்கில் உளதேயாம்
- உள்ளது என்று கூறினால் உள்ளதே