பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 771

15. கும்பகருணன் வதைப்

படலம்
 

முதல்  நாட்போரில்  தோற்று மெலிந்த இராவணன் இராமனின்
அறக்கருணையால் இலங்கை திரும்பினான். பின் நாற்றிசைகளிலுள்ள
அரக்கர்  சேனையைத்  திரட்டத்  தூதுவரை அனுப்பினான். பின்பு
குலமுதல்வனான   மாலியவானிடம்   மனம்   திறந்து  பேசினான்.
இடையில்   புகுந்த  மகோதரன்   கும்பகருணனின்    வலிமையை
நினைவூட்டிப்   போரினைத்  தொடர்ந்து  நடத்துமாறு   கூறினான்.
இராவணன்   கும்பகருணனைத்   துயிலெழுப்பி  மானிடர்  இருவர்
கோநகர்ப்புறம்   முற்றிப்பெற்ற  வெற்றியை அழிக்குமாறு கூறினான்.
பாசம் அறத்தினும் பெரிதென எண்ணிய கும்பகருணன் போர்க்களம்
புக்கான்.  ஆக்கிய செருவெலா  மாக்கித் தமயனையும் தம்பியையும்
காப்பாற்ற     முனைந்து    இராம    பாணத்தால்    விழுந்தான்.
உயிரொடுங்கினும்    புகழொடுங்காமான    வீரனின்    செயல்கள்
இப்பகுதியில்  விளக்கம் பெறுகின்றன. மனித  உறவுகளையும் மனித
மனவாழங்களையும்  இப்பகுதியில் கல்வியிற்பெரிய கம்பர் பாசமும்,
அறமும், சோகமும் கலந்து விவரித்துள்ளார்.
 

இராவணன் இலங்கை மீளுதல்
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

7272.

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த

தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த

வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு

போனான்.

 

வாரணம் பொருதமார்பும் - திசையானைகளின்  எதிர் சென்று
போரிட்டுத்   தந்தங்கள்  துளைத்த  மார்பும்;  வரையினை எடுத்த
தோளும் - கைலாயமலையை  அள்ளி  எடுத்த வலிமிகு  தோளும்;
நாரத முனிவற்கேற்ப நயம்பட உரைத்த நாவும்- நாரத முனிவன்
நன்று நன்று என்று ஏற்குமாறு சாமவேதத்தை இசைநயத்தோடு