பக்கம் எண் :

772யுத்த காண்டம் 

பாடிய    நாவும்;    தாரணி    மௌலி   பத்தும்  -  பத்துத்
தலைகளிலணிந்திருந்த மாலையணிந்த அரசச் சின்னமான மணிமுடி
பத்தும்; சங்கரன்  கொடுத்த வாளும் -  சிவபிரான் தவஆற்றல்
கண்டு   கொடுத்த   வாளும்;   வீரமும் களத்தே போட்டு -
தன்னிடம்   என்றும்   நீங்காமல்  இருந்த  வீரப்  பண்பினையும்
போர்க்களத்திலே   போட்டு   விட்டு; வெறுங்கையே  மீண்டு
போனான்
- தன்னிடமிருந்த பிறிதின் கிழமைப் பொருள்களையும்
தற்கிழமையாய   உறுப்பு,   குணம்   ஆகியவற்றையும்   இழந்து
வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.
 

மார்பும்   தோளும்   நாவும் வீரமும் இராவணனிடம் இருந்த
தற்கிழமைப்   பொருள்கள்.   இப்பொருள்களை   எந்நிலையிலும்
எங்கும்   போட்டு   விடமுடியாது.   இங்குக்கவிஞர்  வீரமிழந்த
இராவணன்  பெற்ற  முதல்  தோல்வியின் பாதிப்பு அவனை எந்த
அளவு  பாதித்துள்ளது  என்ற நுண் பொருளை  விளக்குவதற்காக
நுண்பொருளாகிய  வீரம்,  பருப்பொருள்களான  மார்பு தோள் நா
ஆகியவற்றின் துணைகொண்டு கவிதையை அமைத்துள்ளார்.
 

(1)
 

7273.

கிடந்த போர் வலியார்மாட்டே கெடாத வானவரை

எல்லாம்

கடந்து போய், உலகம் மூன்றும் காக்கின்ற

காவலாளன்,

தொடர்ந்து போம் பழியினோடும், தூக்கிய

கரங்களோடும்,

நடந்துபோய், நகரம் புக்கான்; அருக்கனும் நாகம்

சேர்ந்தான்.

 

கிடந்தபோர் வலியார் மாட்டே- போர் செய்யும் வலிமை
பொருந்திய  பெருவலியுடையவர்களிடம்; கெடாத  வானவரை
யெல்லாம்
- தோல்வியடையாத தேவர்களை  எல்லாம்; கடந்து
போய் 
-  வென்று மேல் சிறந்து; உலக  மூன்றும் காக்கின்ற
காவலாளன்
- மூவுலகங்களையும் காக்கும் காவல் தொழிலுடைய
மால்போல்   விளங்கும்   இராவணன்;    தொடர்ந்து  போம்
பழியினோடும் 
-  என்றும்  அழியாது   பின்பற்றி   வருகின்ற
பழியுடனும்;   தூக்கிய   கரங்களோடும் - எதிரியை வெல்ல
முடியாது  வீணாகத்தொங்கும்  இருபது  கரங்களோடும்; நடந்து
போய் நகரம் புக்கான்
- நாணத்தோடு நடந்து போய் இலங்கை
நகர் புக்கான்;